புனேயில் கொட்டித் தீர்த்த மழை... வெள்ளத்தில் சர்ஃபிங் செய்த இளைஞர்! வைரலாகும் வீடியோ!

By SG Balan  |  First Published Jun 8, 2024, 6:17 PM IST

புனேவில் ஒரு இளைஞர் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் சர்ஃபிங் செய்வது போல மிதந்து சென்றுள்ளார். அந்தக் காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது கோடை வெப்பத்தில் வாடி வதங்கிய மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. ஆனால், பல இடங்களில் மழைநீர் தேங்கி, மின் தடை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், புனேவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்தச் சூழலைச் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரில் சர்ஃபிங் செய்வது போல மிதந்து சென்றுள்ளார். அந்தக் காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tap to resize

Latest Videos

உர்மி என்பவர் ட்விட்டரில் இந்த வீடியோவைப் பதிவிட்டு லைக்ஸ் அள்ளி இருக்கிறார். ஒரு இளைஞர் மிதக்கும் பொருள் ஒன்றின் மீது படுத்துக்கொண்டு தேங்கியுள்ள வெள்ள நீரில் உலா செல்வதை வீடியோவில் காணலாம். தண்ணீர் தேங்கிய சாலை வழியாக கார்கள் செல்ல சிரமப்பட்ட நிலையில், அந்த வாலிபர் ஜாலியாக மிதந்து சென்றார். இந்த வித்தியாசமான காட்சியை அப்பகுதியில் இருந்தவர்கபள் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

ஜெகன் கட்சியின் 15 எம்.பி.க்கள் பாஜகவுடன் இணைகிறார்களா? சந்திரபாபு நாயுடு இதை யோசிச்சாரா?

Pune people got no chill? Naah, they got all the chul. pic.twitter.com/Im6e9ey4uR

— Urrmi (@Urrmi_)

"புனே மக்களுக்கு குளிர்ச்சி கொஞ்சம் கூட கிடைக்கவில்லையா? அதனால்தான், அவர்கள் மழையை முழுக்க பயன்படுத்திக்கொள்கிறார்கள் #PuneRains" என்று குறிப்பிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார் உர்மி. 15 வினாடிகள் கொண்ட சிறிய வீடியோ ஆயிரக்கணக்கான லைக்ஸை பெற்று வருகிறது.

இந்தப் பதிவைப் பார்த்த பலரும் தங்கள் கருத்தைக் கூறியுள்ளனர். "மழையின் போது புனே சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாறும்" என்று ஒரு பயனர் ரிப்ளை செய்துள்ளார். இன்னொருவர், "புனேவின் அலாதீன் தனது மந்திரக் கம்பளத்தின் மீது செல்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் புனேயின் தாழ்வான பகுதிகளில் மழைக்காலத்தில் சாலைகள் மோசமடைவதை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். "கனமழையின் போது மும்பையின் தாழ்வான பகுதிகளில் பயணிக்க இது ஒரு சிறந்த வழியாகும். விரைவாகவும் இலக்கை அடைய முடியும்" என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்து ஆத்திரம் அடைந்த ஒரு பயனர், "இது என்ன முட்டாள்தனம்! டிராபிக் போலீஸ் என்ன செய்துகொண்டிருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.

மந்தமான வந்தே பாரத் ரயில்கள்! வேகக் குறைப்புக்குக் காரணம் என்ன? ஆர்.டி.ஐ. பதிலில் விளக்கம்!

click me!