வயநாடு கிடையாது.. குடும்ப தொகுதியான ரேபரேலியை டிக் அடித்த ராகுல் காந்தி.. வெளியான முக்கிய தகவல்..!

By Raghupati RFirst Published Jun 8, 2024, 5:05 PM IST
Highlights

தற்போது ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகும் தொகுதி வயநாடா? அல்லது ரேபரேலியா? என அகில இந்திய காங்கிரஸில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நீட்டிக்கப்பட்ட செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ளுதல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை முன்மொழிந்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. 

Latest Videos

வயநாடு லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி 6,47,445 வாக்குகள் பெற்றார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட மூத்த இடதுசாரித் தலைவர் ஆனி ராஜாவை விட 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ரேபரேலி தொகுதியில் 6,87649 வாக்குகள் பெற்றார் ராகுல் காந்தி. பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கை விட 2,97619 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராகுல்.

2 தொகுதிகளில் வென்ற ராகுல் காந்தி ஒரு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும். இதனால் தமது குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியை தக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் ராகுல். வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்யவும் ராகுல் காந்தி திட்டமிட்டிருக்கிறாராம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டை விட தனது ஆஸ்தான குடும்ப தொகுதியான ரேபரேலியை தேர்வு செய்ய உள்ளார் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

2014ல் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் பெறுவது இதுவே முதல் முறை. 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டிலும், சபையில் தேவையான மொத்த இடங்களின் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததால், கடந்த 10 ஆண்டுகளில் அது அந்த இடத்தைப் பெறத் தவறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

9 முறை அதிமுக தோல்வி.. ரத்தக்கண்ணீர் வடிக்கும் அதிமுக தொண்டர்கள்.! EPS-க்கு அதிர்ச்சி கொடுத்த கே.சி பழனிச்சாமி

click me!