ஒரு செகண்ட்ல 1.5 லட்சம் போச்சா! கேரளாவில் டூர் போன இடத்தில் நடந்த சம்பவம் வைரல்!

By SG Balan  |  First Published Jun 8, 2024, 4:15 PM IST

பெண் தங்கியிருந்த ரிசார்ட் ஊழியர்கள், கேரள காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து தொலைந்துபோன விலை உயர்ந்த மொபைலைக் கண்டுபிடித்தனர்.


கேரளாவுக்கு விடுமுறைக்காக வந்திருந்த கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐபோனைத் தொலைத்துவிட்டார். கடற்கரையில் உள்ள பெரிய பாறைகளில் இருந்து அலைகளை ரசித்துக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆரம்பத்தில் பல முயற்சிகள் செய்தும் அவரது ஐபோனை மீட்க முடியவில்லை. அந்தப் பெண் தங்கியிருந்த ரிசார்ட் ஊழியர்கள், கேரள காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து தொலைந்துபோன விலை உயர்ந்த மொபைலைக் கண்டுபிடித்தனர்.

Latest Videos

undefined

காணாமல் போன ஐபோனை ஏழு மணி நேரத்தில் எப்படி கண்டுபிடித்தார்கள் என்ற வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகப் பரவி வருகிறது. சவாலான இந்தத் தேடுதல் பணியை அந்த ரிசார்ட் ஊழியர்கள் வீடியோ எடுத்துப் தங்கள் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

புனேயில் கொட்டித் தீர்த்த மழை... வெள்ளத்தில் சர்ஃபிங் செய்த இளைஞர்! வைரலாகும் வீடியோ!

இப்போது வைரலாகி இருக்கும் இந்த வீடியோவில் தீயணைப்பு அதிகாரிகள் பெரிய பாறைகளின் மீது நின்று, போனை மீட்டெடுக்க முயல்வதையும் கயிறு கட்டி கற்களை அகற்றி பல மணிநேர போராட்டத்துக்குப் பிறகு மொபைல் மீட்கப்பட்டதையும் காணலாம். இறுதியில் ஐபோனை மீண்டும் கண்டுபிடித்துக் கொடுத்த அதிகாரிகளுடன் அந்தப் பெண் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

"இந்த வீடியோ நேற்றைய சம்பவத்தின் ஒரு பகுதி. எங்கள் ரிசார்ட்டில் தங்கியிருந்த கர்நாடக மாநில பெண்ணின் 1,50,000 ரூபாய் மதிப்புள்ள ஐபோன் கடற்கரையில் உள்ள பெரிய பாறைகளுக்கு இடையில் விழுந்துவிட்டது. அவர் எவ்வளவு முயற்சித்தும் மீட்க முடியவில்லை. காற்று மற்றும் மழையுடன் பலத்த அலைகளும் அடித்துக்கொண்டிருந்ததால் நிலைமை சவாலாக இருந்தது" என்று ரிசார்ட் பதிவின் கூறப்பட்டுள்ளது.

"ஆனால், ஆண்டிலியா சேலட் குழு மற்றும் கேரள தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் 7 மணிநேர முயற்சி எடுத்து மொபைல் போனை மீட்டனர். இதற்கு உதவிய சுஹைல் மற்றும் கேரள தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு ஆண்டிலியா சேலட் நன்றி தெரிவித்துக்கொள்கிறது" எனவும் அந்தப் பதிவில் எழுதப்பட்டுள்ளது.

இந்த வீடியோவைப் இன்ஸ்டாகிராமில் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். ஒரு லட்சம் பேருக்கு மேல் லைக்ஸ் குவிந்துள்ளது. வீடியோவைப் பார்த்தவர்களில் ஒருவர், "மொபைலுக்கு அவர் இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

"மொபைல் ஃபோனை மீட்டெடுக்க தீயணைப்பு மீட்புக் குழு பயன்படுத்தப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது" என்று இன்னொருவர் கருத்து தெரிவித்துள்ளார். "பாண்டிச்சேரி ராக் பீச்சில் எனக்கும் இதுதான் நடந்தது.. எனது பிக்சல் 7 போன் பாறைகளுக்கு இடையில் விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக நானும் எனது நண்பர்களும் பாறைகளுக்கு அடியில் இருந்து அதை எடுத்துவிட்டோம்" என்று மற்றொரு நபர் தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

கடினமாக உழைத்து ஐபோனை மீட்டு, பெண்ணிடம் ஒப்படைத்த குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்தும் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

3வது முறையாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்! பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் உற்சாக நடனம்!

click me!