விவசாயியைக் கோடீஸ்வரனாக்கிய தக்காளி! ரூ.2.8 கோடி சம்பாதித்த புனே இளைஞரின் அடுத்த டார்கெட் என்ன தெரியுமா?

By SG Balan  |  First Published Jul 17, 2023, 5:30 PM IST

புனேவைச் சேர்ந்த கெய்கர் தனது 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டு இதுவரை 2.8 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். இதனை 3.5 கோடியாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.


நாடு முழுவதும் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள விவசாயி ஒருவர் தக்காளி விற்பனை மூலம் ரூ.2.8 கோடிக்கு மேல் சம்பாதித்திருப்பதாகக் கூறுகிறார்.

36 வயதாகும் ஈஸ்வர் கயாகர் புனேவின் ஜுன்னார் தாலுகாவைச் சேர்ந்தவர். தக்காளி விற்பனையில் சாதனை படைத்துள்ள இவர் தற்போது தன்வசம் இருப்பு வைத்துள்ள சுமார் 4000 தக்காளி பெட்டிகளை விற்பனை செய்து வருவாயை ரூ.3.5 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

பல ஆண்டுகளாக விவசாயத்தில் கடின உழைப்பைச் செலுத்திவருவது குறித்து கூறும் ஈஸ்வர் கைகர், "இது நான் ஒரே நாளில் சம்பாதித்தது அல்ல. கடந்த 6-7 ஆண்டுகளாக எனது 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி சாகுபடி செய்து வருகிறேன். எனக்கும் பலமுறை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நான் என் நம்பிக்கையை விட்டுவிடவில்லை. 2021ல் எனக்கு 18-20 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது, அப்போதும் நான் துவண்டுபோகவில்லை" என்று உறுதியுடன் பேசுகிறார்.

சந்திரயான்-3 விண்கலத்தை 2வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி: இஸ்ரோ அறிவிப்பு

"இந்த ஆண்டு நான் 12 ஏக்கரில் தக்காளி பயிரிட்டுள்ளேன். இன்று வரை சுமார் 17000 பெட்டி தக்காளியை விற்றுள்ளேன். ஒரு பெட்டிக்கு ரூ.770 முதல் ரூ.2311 வரை நான் சம்பாதித்தேன். இதுவரை ₹ 2.8 கோடி கிடைத்துள்ளது. என்னுடைய பண்ணையில் இன்னும் 3000 முதல் 4000 தக்காளி பெட்டிகள் கையிருப்பில் உள்ளன. கணக்கிட்டுப் பார்த்தால், இந்த ஆண்டு எனது மொத்த வருவாய் சுமார் 3.5 கோடி ரூபாயாக உயரக்கூடும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

அவரது வெற்றியால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். "எங்கள் தக்காளிக்கு கிடைத்த விலையால் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்" என்று தெரிவிக்கும் அவர், “எனது பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரின் ஆசியாலும், உடன் பணிபுரியும் மனைவியின் கடின உழைப்பாலும் இந்த வெற்றி எனக்கு கிடைத்துள்ளது" என்று கூறி அவர்களுக்கு நன்றி கூறுகிறார்.

தக்காளி விற்பனையில் ஒரு கிலோவுக்கு சுமார் 30 ரூபாய் கிடைக்கும் என்று நினைத்ததாகவும் ஆனால் இந்த சீசன் தனக்கு அதிர்ஷ்டவசமாக அமைந்திருக்கிறது என்றும் அவர் சொல்கிறார்.

கெய்கர் 2005ஆம் ஆண்டு தனது தந்தை செய்துவந்த விவசாயத்தை எடுத்துச் செய்துவருகிறார். தனது மனைவியுடன் இணைந்து பண்ணையில் வேலை செய்கிறார். முன்பு ஒரு ஏக்கர் நிலத்தில் மட்டுமே தக்காளி சாகுபடி செய்து வந்த கெய்கர், 2017ஆம் ஆண்டு முதல் 12 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். தக்காளியைத் தவிர, அந்தந்த பருவங்களுக்கு ஏற்ப வெங்காயம் மற்றும் பூக்களையும் கெய்கர் பயிரிடுகிறார்.

கணவனை இழந்த பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்... தோழியின் கணவருடன் சேர்ந்து பழி தீர்த்த இளம்பெண்

click me!