
புனேயில் உள்ள ஒரு கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்த லிஃப்ட் அதில் பயணித்த இரண்டு பேர் வெளியேறிய சில விநாடிகளில் திடீரென வேகமாக கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சில நொடிகளுக்கு முன்பாக வெளியேறிய பெண்ணும் 11 வயது சிறுவனும் ஆபத்தில் இருந்து தப்பினர்.
வியாழன் அன்று புனேவில் உள்ள பவ்தான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் பழுதாகி இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன் உள்ளே அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவில் கடைசி நேரத்தில் பெண்ணும் சிறுவனம் வெளியேறிய காட்சி உள்ளது. தப்பிய இருவரும் அந்தக் குடியிருப்பில் வசிக்கும் பாரத் சவுதாரி என்பவரின் மனைவி மற்றும் மகன் என்று தெரியவந்துள்ளது.
இன்று இரவு பூமிக்கு மிக அருகில் வரும் நீல நிலா! ஆகஸ்ட் மாதம் இரண்டு முறை தோன்றும் 'சூப்பர் மூன்'!
இருவரும் கட்டிடத்தின் ஏழாவது மாடிக்கு செல்ல இருந்தனர் என்றும் ஆனால் லிஃப்ட் அங்கு நிற்காமல் பத்தாவது மாடிக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் அதிலிருந்து வெளியேறிய பிறகு, லிஃப்ட் பெரும் சத்தத்துடன் கீழே விழுந்தது. இந்தச் சம்பவம் குறித்து பாரத் சவுதாரி கொடுத்த புகாரின் பேரில் அந்தக் குடியிருப்பின் உரிமையாளர் மற்றும் கட்டிடத்தை பராமரிக்கும் பணிக்கு பொறுப்பான ஏஜென்சி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
"லிப்ட் பராமரிப்பு ஏஜென்சியின் பில்டர்கள் மற்றும் அதிகாரிகளை வரவழைத்துள்ளோம். மேலும், லிஃப்டை சரிசெய்யச் சொன்னோம்" என்று போலீசார் கூறுகின்றனர். புகார்தாரர் பாரத் சௌதாரி கூறுகையில், "12 மாடி கட்டிடங்களில் இரண்டு லிஃப்ட்கள் இருக்கின்றன. ஆனால் இங்கு ஒரே ஒரு லிஃப்ட் மட்டும்தான் இருக்கிறது. அதுவும் மோசமாக பராமரிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
“கட்டிடம் கட்டுபவர்களுக்கும் லிஃப்ட் பராமரிப்பு நிறுவனத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தைப் பார்த்த பிறகே போலீசார் வழக்கை விசாரிக்க வேண்டும்” என்று புனே மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுஹாஸ் பட்வர்தன் வலியுறுத்துகிறார்.
தீயில் கருகிய கிடார், தபேலா... இசையால் ஒழுக்கக்கேடு ஏற்படுமாம்! இசைக்கருவிகளைக் கொளுத்தும் தாலிபான்!