புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு... முதல்வருடனான பேச்சுவார்த்தைக்கு பின் முடிவு!!

By Narendran SFirst Published Oct 4, 2022, 12:04 AM IST
Highlights

மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் கடந்த 6 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் புதுச்சேரியில் பரபரப்பான சூழல் நிலவி வந்தது. இதை அடுத்து முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: நீட் தேர்வு குளறுபடி வழக்கு... தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

அதில் புதுச்சேரி சட்டபேரவையில் முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் சந்தித்து மின்துறை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் ஊழியர்களிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை ஏற்பட்டதாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். 

இதையும் படிங்க: வணிகவரித்துறையும் பதிவுத்துறையும் சேர்ந்து சாதனை... கடந்த ஆண்டைவிட ரூ.20,776 கோடி அதிகமாக வசூலித்து அசத்தல்!!

இதுகுறித்து பேசிய போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, முதல்வர் தொழிலாளர் வைத்த கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து தீபாவளி வரை இந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். அக்டோபர் 24ஆம் தேதி வரை இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இடைப்பட்ட நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டால் மீண்டும் இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். 

click me!