புதுச்சேரி டிஜிபி, ஏடிஜிபி இடமாற்றம்.. புதிய டிஜிபி யார் தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு..

Published : Jun 08, 2023, 09:06 PM IST
புதுச்சேரி டிஜிபி, ஏடிஜிபி இடமாற்றம்.. புதிய டிஜிபி யார் தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு..

சுருக்கம்

புதுச்சேரியின் புதிய டிஜிபியாக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி டிஜிபி மனோஜ் குமார் லால், ஏடிஜிபி ஆனந்த மோகன்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய டிஜிபியாக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் இன்று பிறப்பித்துள்ள உத்தரவின் படி, புதுச்சேரி டிஜிபியாக இருந்த மனோஜ் குமார் லால் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் விரைவில் பணிஓய்வு பெறவுள்ள சூழலில் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த 2022 ஜூலையில்  புதுச்சேரி டிஜிபியாக இவர் பொறுப்பேற்றிருந்தார். சரியாக ஓராண்டு நிறைவடையவுள்ள சூழலில் மாற்றப்படுகிறார்.

 

பிபர்ஜோய் புயல் மேலும் தீவிரமடையும்.. அடுத்த 3 நாட்களுக்கு எப்படி இருக்கும்? இந்திய வானிலை மையம் தகவல்

தற்போது புதிய டிஜிபியாக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் சீனிவாசன் புதுச்சேரி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் புதுச்சேரி ஏடிஜிபி ஆனந்த் மோகன், பதவி உயர்வு பெற்று அருணாசல் பிரதேசம் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் ஐஜி ஓய்வு பெற்றார். இச்சூழலில் டிஜிபி, ஏடிஜிபி ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி குமார் அந்தமானுக்கும், ஐஏஎஸ் அதிகாரி ரிஷிதா குப்தா டெல்லிக்கும், ஐபிஎஸ் அதிகாரிகள் பிரதிக்சா, விஷ்ணுகுமார் ஆகியோர் டெல்லிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் வேலை நாட்கள் 198ல் இருந்து 205 ஆக உயர்வு.. மாநில அரசு அதிரடி உத்தரவு..

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!