கல்லூரி வேலையை உதறிவிட்டு போட்டித் தேர்வு எழுத பயிற்சி அளிக்கும் பேராசிரியர்!

By SG Balan  |  First Published May 1, 2023, 2:05 PM IST

கல்லூரி பேராசிரியர் பணியை விட்டுவிட்டு 22 ஆண்டுகளாக போட்டித் தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார் கல்வி ஆலோசகர் முஹம்மது யாகூப் கான்.


"எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை; ஓய்வு பெறுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இப்போது, 6,000க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆன்லைன் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்கிறேன். என்னால் விடுமுறையில் செல்ல முடியாது."

என்று கூறுகிறார் கல்வி ஆலோசகர் முஹம்மது யாகூப் கான். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த கான், 22 ஆண்டுகளாக அரசு பணிகளுக்கான தேர்வு எழுதும் ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

Latest Videos

undefined

கான் ஸ்ரீநகரில் உள்ள தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மையத்தின் இயக்குநராக உள்ளார். வேலைகளைப் பெறுவதற்கும், அதற்கான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்குச் சென்று விரிவுரைகளை வழங்குகிறார்.

பேராசிரியர் எம்.ஒய். கான் இதுவரை போட்டித் தேர்வுகள், ஆங்கில மொழித் திறன் தேர்வு, எம்பிஏ நுழைவுத் தேர்வு, சமூக அறிவியல் மற்றும் கல்வியியல் தொடர்பாக ஆறு புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இஸ்லாம் மற்றும் குரான் குறித்த புத்தகம் ஒன்றையும், குழந்தைகளுக்கான அறிவியல் புத்தகம் ஒன்றையும் உருது மொழியில் எழுதியுள்ளார்.

ஸ்ரீநகரில் உள்ள அவரது பயிற்சி மையம் உருவாக்கிய குறிப்பிடத்தக்க சாதனையாளர்களில் ஒருவர் 2009ஆம் ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் டாப்பராக தேர்ச்சி பெற்ற ஷா பைசல். அவர் மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

 

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்! கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

பேராசிரியர் யாகூப் கான் தனது தொழில் வாழ்க்கையின் புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் வரை, நிர்வாகப் பேராசிரியராக வழக்கமான வேலையில் இருந்தார்.

கல்லூரியில், தனது மாணவருடன் உரையாடும்போது, ​​இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் நிறைய சிரமங்களை எதிர்கொள்வதை உணர்ந்தார்.

படித்து பட்டம் பெறுவதைத் தவிர, இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் மிகவும் தேவை என்று அவர் உணர்ந்தார். இந்த எண்ணம் அவரை வேலையை விட்டுவிட்டு புதிய பயணத்தை மேற்கொள்ள வைத்தது.

இன்று 66 வயதில், அவர் ஒரு பிஸியான மனிதராக இருக்கிறார். இடைநிறுத்தம் செய்யவோ ஓய்வு எடுக்கவோ நேரமில்லை.

"ஒவ்வொரு நபருக்கும் நேரம் ஒரே அளவுக்குதான் உள்ளது. இருப்பினும், அந்த நேரத்தை ஒவ்வொருவரும் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதுதான் வித்தியாசத்தைத் தீர்மானிக்கும். படைப்புப்பூக்கம் கொண்ட வேலைகளில் ஈடுபடுத்திக்கொண்டால், மனம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்” என்கிறார் கான்.

“சும்மா இருக்கும் மனிதனின் மூளை பிசாசின் பட்டறை என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிவோம். செயலற்ற மனம் மன நோய்களுக்கு, குறிப்பாக மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது.

ஒவ்வொரு நொடியும் பிஸியாக இருப்பதும், சில பயனுள்ள வேலைகளைச் செய்வதும் பல பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்” என்கிறார் யாகூப் கான்.

மேலும், ஓய்வு பெற்றவர்கள், தாங்கள் நீண்ட காலம் உழைத்திருப்பதாகவும், ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அடிக்கடி கூறுவார்கள். இது சோம்பேறியாக இருப்பதற்கும் புதிதாக சிந்திக்க முடியாமததற்கும் கூறப்படும் சாக்குபோக்குதான்.” என்றும் சொல்கிறார்.

"சும்மா உட்கார்ந்திருப்பதால், நமக்கு நாமே தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், நம் வீட்டின் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறோம். முன்பெல்லாம், ஓய்வு பெற்றவர்களுக்கு வீட்டில் உள்ள குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது என்று கூறும் அவர், ஆனால் இந்த நாட்களில் அத்தகைய பொறுப்புகள் இல்லை என்பதால், மக்கள் சும்மா இருக்கவே விரும்புகிறார்கள் என்கிறார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை பரப்பும் 14 செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு நடவடிக்கை

ஒரு புதிய தலைமுறைக்கு உதவ தனது அனுபவங்கள் தேவை என்பதை உணர்ந்தபோது, ​​ஒரு பேராசிரியராக முறையான ஓய்வுக்காக காத்திருக்கத் தனக்குத் தோன்றவில்லை என்கிறார்.

"வேலையில் இருந்து விலகினால், அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்று நானே நினைத்தேன். ஏனென்றால் இந்த வேலையைச் செய்யக்கூடிய பல ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் நல்ல வேலை கிடைப்பதில் வழிகாட்டுதல் தேவை, எனவே நான் இந்த முடிவை எடுத்தேன்.” என்று நினைவுகூர்கிறார் கான்.

“எந்த துறையில் உங்களுக்கு 30-40 ஆண்டுகள் அனுபவம் இருந்தால், ஓய்வு பெற்றவுடன் அந்த துறையில் உங்கள் முக்கியத்துவம் முடிந்துவிடாது. உங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களின் அனுபவங்கள் வரும் தலைமுறைக்கு பெரிதும் பயன்படும். நம்மை நாமே புரிந்துகொள்ளாதபோது, ​​மற்றவர்களுக்கு எப்படி விளக்க முடியும்?” எனக் கூறுகிறார்.

இளைஞர்களுக்கு முடிவு எடுக்கும் திறனை ஆரம்பத்திலிருந்தே உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கும் கான், “வேலையைப் பெறுவது மட்டுமே ஒரு இளைஞனின் இறுதி இலக்காக இருக்கக்கூடாது. வாழ்நாள் முழுவதும் வீடு, குடும்பம், சமூகம் மற்றும் தேசத்திற்கு பயனுள்ளவராக இருக்கவேண்டும். அதற்காகவே முயற்சி செய்கிறேன்” என யாகூப் கான் கூறுகிறார்.

"வாழ்க்கையில் நீங்கள் செய்ய விரும்பியதைச் செய்ய முடியவில்லை என்றால், ஓய்வுக்குப் பிந்தைய நேரம் மிகவும் பொருத்தமானது.  உங்களுக்கு விருப்பமானதை அப்போது செய்யலாமே, தடுக்கப்போவது யார்? தொடர்ந்து செல்லுங்கள்" என ஊக்கப்படுத்துகிறார்.

தனது 24 மணிநேரத்தை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்று கேள்விக்கு பதில் அளிக்கும் கான், “எனக்கு ஓய்வுகூட தேவையில்லை. என் கை, கால்களும் மூளையும் வேலை செய்யும்வரை நான் சுறுசுறுப்பான வாழ்வேன். உடலும் மனமும் ஆதரவளிப்பதை நிறுத்தினால் மட்டுமே ஓய்வு எடுப்பேன்" என்று உறுதிபட தெரிவிக்கிறார்.

களைகட்டிய திருச்சூர் பூரம் கொண்டாட்டம்! அதிகாலை வானவேடிக்கையுடன் முடிகிறது!

click me!