ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை பரப்பும் 14 செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு நடவடிக்கை

By SG Balan  |  First Published May 1, 2023, 12:34 PM IST

தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ், பயங்கரவாதத்தை பரப்புவதாகச் சந்தேகிக்கப்பட்ட 14 மொபைல் ஆப்களும் தடை செய்யப்பட்டுள்ளன.


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை பரப்புவதற்காக பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த 14 மெசஞ்சர் மொபைல் அப்ளிகேஷன்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லை பிராந்தியத்தில் உள்ள பயங்கரவாதிகள் தங்கள் ஆதரவாளர்களுடன் தொடர்புகொள்ள இந்த செயலிகளைப் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்துள்ளது.

Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second line, Zangi, Threema ஆகிய 14 மொபைல் அப்ளிகேஷன்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

பயங்கரவாதிகள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதற்கு பயன்படுத்தும் தகவல் தொடர்பு சாதனங்கள் பற்றி உளவு ஏஜென்சிகள் கண்காணித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். அந்த ஆய்வு மேற்கொண்டபோது, இந்த செயலிகளுக்கு இந்தியாவில் பிரதிநிதி இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்தச் செயலிகளின் செயல்பாடுகளை கண்காணிப்பது சவாலானது.

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்! கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

இதனால், பிற புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இந்திய சட்டங்களைப் பின்பற்றாத மொபைல் அப்ளிகேஷன்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. பட்டியலைத் தயாரித்த பிறகு, சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அவற்றைத் தடை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

புலனாய்வு அமைப்புகள் அமைச்சகத்துக்கு அளித்த தகவலில், இந்த செயலிகள் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத பிரச்சாரத்தை பரப்புவதாக தெரிவித்துள்ளன. அதன்படி தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ், 14 மொபைல் ஆப்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் வாகனம் மீது செல்போன் வீசிய பெண் பாஜக தொண்டர்!

click me!