ராகுலின் குரலை நசுக்க பார்க்கிறார்கள்... இதற்கெல்லாம் பயந்த ஆள் கிடையாது என் அண்ணன் - பிரியங்கா காந்தி

Published : Mar 26, 2023, 01:06 PM IST
ராகுலின் குரலை நசுக்க பார்க்கிறார்கள்... இதற்கெல்லாம் பயந்த ஆள் கிடையாது என் அண்ணன் - பிரியங்கா காந்தி

சுருக்கம்

ராகுல் காந்தியை சிறையில் தள்ளி அவரது குரலை நசுக்கப் பார்க்கிறார்கள் என டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பிரியங்கா காந்தி பேசி உள்ளார்.

ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த பதவி பறிப்பு விவகாரத்துக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது டெல்லி ராஜ்காட் பகுதியில் நடைபெற்ற சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரியங்கா காந்தி, தனது அண்ணனுக்கு எதிராக நடக்கும் சதிச்செயல்கள் குறித்து ஆவேசத்துடன் பேசினார்.

அதில் அவர் பேசியதாவது : “ராகுல்காந்தியை சிறையில் தள்ளி அவரது குரலை நசுக்கப் பார்க்கிறார் மோடி. இதற்கெல்லாம் அஞ்சக்கூடியவர் அல்ல என் அண்ணன். சத்தியத்திற்கும் ஒரு சக்தி உண்டு. ஜனநாயகத்தை காங்கிரஸ் நிச்சயம் பாதுகாக்கும். என் தந்தையையும், தாயையும் அவமானப்படுத்தினார்கள். பாஜகவை சேர்ந்த முதல்வர் ஒருவர், ராகுல் காந்திக்கு அவரது தந்தை யார் என்றே தெரியாது என மிகவும் தரக்குறைவாக பேசினார். 

இதையும் படியுங்கள்... தகுதிநீக்கப்பட்ட எம்.பி.: டிவிட்டர் பயோவை மாற்றிய ராகுல் காந்தி!

இதுபோன்று தரக்குறைவாக பேசியவர்களை தகுதி நீக்கம் செய்யவில்லை. அவர்களை ஜெயிலுக்கும் அனுப்பவில்லை. அவர்கள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்படவில்லை. இப்படி எங்கள் குடும்பத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்கள். நாங்களும் அமைதியாக இருந்து வருகிறோம். பொறுமைக்கும் எல்லை உண்டு. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இந்த நாட்டின் பிரதமர் ஒரு கோழை, ஒரு சுயநலவாதி.

நாடாளுமன்றத்தில் என் அண்ணன் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கட்டியணைத்தபோது, உங்கள் மீது எனக்கு எந்தவித காழ்புணர்ச்சியும் இல்லை. நமது சித்தாந்தங்கள் மாறுபடலாம், ஆனால் வெறுப்பு சித்தாந்தம் என்பது இல்லை என சொல்லிவிட்டு வந்ததாக பிரியங்கா கூறினார். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படித்த என் அண்ணனை பப்பு என்று அழைத்து கிண்டலடித்தவர்களுக்கு தன் செயலால் தான் பப்பு இல்லை, யார் என்று ராகுல் காந்தி உணர்த்தியதாக பிரியங்கா தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... ஆரம்பிக்கலாமா... இறங்கி அடிக்க தயாரான ராகுல் காந்தி - விக்ரம் பட பாடலுடன் போட்ட சூசக பதிவு வைரல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!