priyanka gandhi : சோனியைவைத் தொடர்ந்து, பிரியங்கா காந்தியும் கொரோனாவில் பாதிப்பு

Published : Jun 03, 2022, 11:10 AM ISTUpdated : Jun 03, 2022, 01:12 PM IST
priyanka gandhi : சோனியைவைத் தொடர்ந்து, பிரியங்கா காந்தியும் கொரோனாவில் பாதிப்பு

சுருக்கம்

After Sonia, Priyanka Gandhi vadra nows tests positive for covid-19  :காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் அவரின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்திக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் அவரின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்திக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நேற்றுமுன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சோனியா காந்தி தனதுவீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தேவையான மருந்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.

காங்கிரஸ் மூத்த செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா அளித்த பேட்டியில், "சோனியா காந்தி கடந்த வாரம் முழுவதும் பல்வேறு தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு சில நாட்களுக்குப்பின் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்றுஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பிரியங்கா காந்தி பதிவிட்ட கருத்தில் “ லேசான அறிகுறிகளுடன் நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். அனைத்துவிதமான பாதுகாப்பு வழிகாட்டல்களையும் பின்பற்றி என்னை நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இண்டிகோ விமானத்தில் புகுந்த புறா! நடுவானில் பயணிகளுக்கு ஆச்சரியம்!
நேரு சொன்னதைத் திரிக்கும் மோடி.. வந்தே மாதரம் விவாதத்தில் பிச்சு உதறிய பிரியங்கா காந்தி!