ஒவ்வொரு மசூதிகளில் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள்..? முஸ்லீம்களும் இந்துக்களே.. ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு..

By Thanalakshmi VFirst Published Jun 3, 2022, 10:50 AM IST
Highlights

ஆர்எஸ்எஸ் எந்தவிதமான மத வழிபாட்டுக்கும் எதிரானது அல்ல. எல்லா மத வழிபாட்டையும் புனிதமானதாகவே கருதுகிறோம். சிலர் முஸ்லிம் வழிபாட்டு முறையை தேர்ந்தெடுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவருமே ரிஷிகளின், முனிகளின், சத்ரியர்களின் வழித்தோன்றல் தானே. நம் எல்லோருக்கும் ஒரே மூதாதையர் தான் என்று ஆர்எஸ்எஸ் தலைபர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
 

ஆர்எஸ்எஸ் எந்தவிதமான மத வழிபாட்டுக்கும் எதிரானது அல்ல. எல்லா மத வழிபாட்டையும் புனிதமானதாகவே கருதுகிறோம். சிலர் முஸ்லிம் வழிபாட்டு முறையை தேர்ந்தெடுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவருமே ரிஷிகளின், முனிகளின், சத்ரியர்களின் வழித்தோன்றல் தானே. நம் எல்லோருக்கும் ஒரே மூதாதையர் தான் என்று ஆர்எஸ்எஸ் தலைபர் மோகன் பகவத் பேசியுள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், "நாட்டில் சமீபமாக சில பிரசித்த பெற்ற இந்து கோயில்கள் தொடர்பாக சில சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. வரலாற்றை நாம் மாற்ற முடியாது. ஞானவாபி சர்ச்சை இன்றைக்கு ஏற்பட்டது அல்ல. அதற்கு இப்போதைய முஸ்லிம்களோ, இப்போதைய இந்துக்களோ காரணமாக முடியாது. ஞானவாபி மசூதி - காசி விஸ்வநாதர் கோவில் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள நிலையில் பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இது எப்போதோ நடந்த சம்பவம். அதற்கு இன்றைய இந்துக்களோ அல்லது இன்றைய முஸ்லீம்களோ உருவாக்கவில்லை. 

மேலும் படிக்க: HBD Kalaignar Karunanidhi : பழம்பெரும் வசனகர்த்தா ஆரூர் தாஸ்க்கு விருது -10 லட்சம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.!

இஸ்லாம் என்பது இந்தியாவுக்கு வெளியில் இருந்து, அடக்கி ஆள நினைத்தவர் கொண்டு வந்த மதம் என்று கூறிய அவர், அப்போது விடுதலை வேட்கையில் இருந்து நம் நாட்டு மக்களை உணர்வுபூர்வமாக தாக்க தேவஸ்தானங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கோயில்கள் அழிக்கப்பட்டன என்றார். மேலும் சில இந்துக் கோயில்களுக்கு சிறப்பு அந்தஸ்து இருக்கிறது. அதாவது ஞானவாபி போல் இந்துக் கோயிலில் மசூதி இருக்கிறது. இதைத் தான் தற்போது இந்து சமூகத்தினர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனரே தவிர இந்துக்கள் முஸ்லிகளுக்கு எதிராக இல்லை. ஏனெனில் இப்போதைய முஸ்லிம்களின் மூதாதையர்கள் எல்லோரும் இந்துக்களாக தானே இருந்தனர்.

எனவே இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினர் ஒன்றாக அமர்ந்து பிரச்சனையை சுமூகமாக பேசி பரஸ்பர உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். அதோடுமட்டுமல்லாமல், நாம் தினந்தோறும் ஒரு புதிய சர்ச்சையை வெளியே கொண்டு வர கூடாது.  ஞானவாபி மீது நமக்கு பக்தி இருக்கிறது. நாம் ஏன் சர்ச்சையை அதிகரிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார். 

ஞானவாபி வழக்கில் நீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்கினாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் . மேலும் நீதித்துறையை புனிதமாக கருத வேண்டும். அதன் முடிவுகளை நாம் கேள்விக்கு உள்ளாக்கக் கூடாது என்றார். ஆர்எஸ்எஸ் எந்தவிதமான மத வழிபாட்டுக்கும் எதிரானது அல்ல. எல்லா மத வழிபாட்டையும் புனிதமானதாகவே கருதுகிறோம். சிலர் முஸ்லிம் வழிபாட்டு முறையை தேர்ந்தெடுத்திருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவருமே ரிஷிகளின், முனிகளின், சத்ரியர்களின் வழித்தோன்றல் தானே. நம் எல்லோருக்கும் ஒரே மூதாதையர் தான் என்றார்.

மேலும் படிக்க: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவா? சந்தேகம் ஏற்படுவதாக ஓபிஎஸ் விமர்சனம்
 

click me!