
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள இரசாயண ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வதோதராவில் அமைந்து இருக்கும் தீபக் நைட்ரைட் ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அந்த பகுதி முழுக்க புகை சூழ்ந்துள்ளது. விபத்து ஏற்பட்டதை அடுத்து இரசாயண ஆலையில், தீயை அணைக்க பல்வேறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
இரசாய ஆலையில் இருந்து புகை வெளியேறும் காட்சிகள் நீண்ட தூரத்தில் இருந்த படி தெளிவாக தெரிகிறது. ஆலையில் உள்ள சூழல் கண்காணிக்கப்பட்டு வருவதாக தீபரக் நைட்ரைட் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பொது அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
விபத்துக்கான காரணம்:
ஆலையில் ஏற்பட்ட விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த விபத்தில் இதுவரை பத்து பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பலர் ஆலையினுள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இரசாயண ஆலையில் ஏற்பட்டு இருக்கும் தீயை அணைக்க பதினைந்து தீ அணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
விபத்து ஏற்பட்ட இரசாயண ஆலையில் தீயை அணைக்கும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. மேலும் ஆலையில் சிக்கியுள்ளவர்களின் விவரங்கள், அவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.