ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவை, ஏகப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள்.. பீகாரில் கோடிகளை வாரி இறைக்கும் பிரதமர் மோடி

By karthikeyan VFirst Published Sep 20, 2020, 12:36 AM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடி, வரும் 21ம் தேதி பீகாரில் 9 நெடுஞ்சாலை மற்றும் ஃபைபர் ஆப்டிகல் இணைய சேவை ஆகிய திட்டங்களை காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கிறார்.
 

பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி மூலம் திறந்துவைத்து அடிக்கல் நாட்டி வருகிறார். அந்தவகையில் வரும் 21ம் தேதி பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்டங்கள் மற்றும் மாநிலத்தின் 45,945 கிராமங்களை ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவையின் மூலம் இணைக்கும் திட்டம் ஆகியவற்றை தொடங்கிவைக்கிறார்.

இந்த 9 நெடுஞ்சாலை திட்டங்களும் 350 கிமீ தொலைவிற்கு மொத்தம் ரூ.14,258 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளன. பீகாரில் மாநிலத்திற்குள்ளான சாலை பயணத்தை எளிதாக்கும் விதமாக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பயன்படும் விதமாக அமைக்கப்படுகிறது. பீகாருக்குள் மட்டுமல்லாது, பீகாரிலிருந்து அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களையும் இணைக்கும் சாலை திட்டங்களும் இதில் அடங்கும்.

பிரதமர் நரேந்திர மோடி 2015ம் ஆண்டு பீகார் மாநிலத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ.54,700 கோடி ரூபாய் செலவில், 75 திட்டங்களை அறிவித்தார். அதில், 13 திட்டங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டன. 38 திட்டங்கள் வெவ்வேறு கட்டங்களில் செயல்பாட்டில் உள்ளன.

இந்த திட்டங்களின் மூலம் பீகாரில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிடும். அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுவிடும்.

பிரதமர் தொகுப்பின் கீழ், கங்கை ஆற்றில் கட்டப்பட்ட பாலங்களின் எண்ணிக்கை 17ஆக இருக்கும். பீகார் மாநிலத்தில் ஆறுகளின் குறுக்கே ஒவ்வொரு 25 கிலோமீட்டருக்கும் இடையே பாலம் கட்டப்படவுள்ளது.

நெடுஞ்சாலை திட்டங்கள்:

NH-31: 47.23 கிமீ தொலைவிற்கான பக்தியார்பூர் - ரஜாலி  4 வழிச்சாலை: ரூ.1149.55 கோடி
பக்தியார்பூர் - ரஜாலி  50.89 கிமீ தொலைவிற்கான 4 வழிச்சாலை:  ரூ. 2650.76 

NH-30: ஆரா - மோஹானியா 4 வழிச்சாலை - 54.53 கிமீ தொலைவு: ரூ.885.41 கோடி
ஆரா - மோஹானியா 4 வழிச்சாலை - 60.80 கிமீ தொலைவு: ரூ.855.93 கோடி

NH-131A: நரேன்பூர் - புர்னியா 49 கிமீ தொலைவில் 4 வழிச்சாலை: ரூ.2288 கோடி

NH 131G:  39 கிமீ தொலைவில் ஆறுவழிச்சாலை பாட்னா ரிங் ரோடு(கன்ஹாலி-ராம்நகர்): ரூ.913.15 கோடி

NH-19: பாட்னாவில் கங்கை ஆற்றில் 14.5 கிமீ தொலைவிற்கு 4 வழிப்பாதை கொண்ட பாலம்: ரூ.2926.42 கோடி

NH-106: கோசி ஆற்றில் 28.93 கிமீ தொலைவில் 4 வழிப்பாதை கொண்ட பாலம்: ரூ.1478.40 கோடி

NH-131B: கங்கை ஆற்றில் 4.445 கிமீ தொலைவில் 4 வழிப்பாதை கொண்ட பாலம்: ரூ.1110.23 கோடி.

ஆப்டிகல் ஃபைபர் இணைய சேவைகள்:

பீகாரில் உள்ள 45,945 கிராமங்களை இணைய சேவையில் இணைக்கும் டிஜிட்டல் புரட்சி திட்டம் இது. தொலைத்தொடர்புத்துறை, எலக்ட்ரானிக்ஸ்&ஐடி அமைச்சகம் மற்றும் பொதுச்சேவை மையம் ஆகிய துறைகள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.

பொதுச்சேவை மையம்(CSC) பீகாரில் மொத்தம், 34,821 மையங்களை கொண்டுள்ளது. எனவே அந்த தொழிலாளர்களை கொண்டு இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திவிடும். ஆனால் அந்த தொழிலாளர்களை இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மட்டுமல்லாது, பீகாரின் அனைத்து கிராம மக்களுக்கும் ஃபைபர் ஆப்டிகல் இணைய சேவையை கொண்டு சேர்க்கவும் பயன்படுத்திக்கொள்ளும். இந்த திட்டத்தின் மூலம் அரசு தொடக்கப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆஷா பணியாளர்கள் உட்பட அரசு நிறுவனங்கள் அனைத்திற்கும் ஒரு wi-fi மற்றும் 5 கட்டணமில்லா இணைய இணைப்பு கொடுக்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் கல்வி, விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட பல சேவைகளை டிஜிட்டல்மயமாக்க முடியும்.

click me!