கோல்டன் எக்ஸ்க்ளூசிவ்: திருடிய தங்க செயினை சுவர்ணா டிவிக்கு அனுப்பிவைத்த திருடன்; ஓனரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சி

By karthikeyan VFirst Published Sep 18, 2020, 5:17 PM IST
Highlights

கர்நாடகாவில் செயின் பறிப்பு திருடன், தான் திருடிய தங்க செயினை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் பொறுப்பை சுவர்ணா நியூஸ்(ஏசியாநெட் கன்னட செய்தி சேனல்) கொடுத்த சம்பவம் கர்நாடக மக்களையும் சுவர்ணா டிவி நிறுவனத்தையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
 

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனங்களில் முக்கியமான இடத்தில் இருக்கிறது. மலையாளம் மற்றும் கன்னடம்(சுவர்ணா டிவி) ஆகிய மொழிகளில் செய்தி சேனல்களும், தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பெங்கால் ஆகிய மொழிகளில் செய்தி இணையதளங்களையும் பெற்றிருக்கும் மிகப்பெரிய செய்தி நிறுவனம்.

மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையேயான பாலமாக ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க், நேர்மையுடனும் துணுவுடனும் உறுதியுடனும் தொடர்ச்சியாக செயல்பட்டுவருகிறது. நடுநிலையுடன் மக்கள் நலனை கருத்தில்கொண்டு செய்திகளை வெளியிடுவதால், மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் சுவர்ணா டிவி (கன்னட ஏசியாநெட் செய்தி சேனல்) மக்கள் மத்தியில் மிகுந்த நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறது என்பதை பறைசாற்றும் விதமாக ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

கர்நாடகாவில் ஒரு திருடன், தான் திருடிய தங்க செயினை அதன் சொந்தக்காரரிடமே சேர்த்துவிட விரும்பி, அதை எப்படி ஒப்படைப்பது என்று தெரியாத அந்த திருடன், அந்த பணியை செவ்வனே செய்யும் பணியை சுவர்ணா டிவியிடம் ஒப்படைத்தார்.

சுவர்ணா டிவியின் மீதான நம்பிக்கையால், அந்த திருடன் திருடிய செயினை, அதன் உரிமையாளரின் முகவரியையும் குறிப்பிட்டு சுவர்ணா டிவி அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் சுவர்ணா டிவியின் மீதான மக்களின் நம்பிக்கையை பறைசாற்றும் விதமாகவும், மக்களுக்காகவும் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் நேர்மையாக செயல்படுவதற்கான அங்கீகாரமாகவும் அமைந்தது.

சுவர்ணா டிவி, அந்த செயினின் உரிமையாளரை தொடர்புகொண்டு அலுவலகத்திற்கு வரவழைத்து செயினை பாதுகாப்பாக ஒப்படைத்தது. இந்த சம்பவம் கர்நாடக மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் சுவர்ணா டிவி மீதான நம்பிக்கை மற்றும் நன்மதிப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.
 

click me!