சௌமித்ர சட்டர்ஜியின் இறப்பு இந்திய சினிமாவுக்கே மாபெரும் இழப்பு.. பிரதமர் மோடி இரங்கல்

By karthikeyan VFirst Published Nov 15, 2020, 3:45 PM IST
Highlights

நடிகர் சௌமித்ர சட்டர்ஜியின் இறப்பு, இந்திய கலையுலகத்திற்கு மாபெரும் இழப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 

வங்காள திரையுலகின் பழம்பெரும் மூத்த நடிகர் சௌமித்ர சட்டர்ஜி. 85 வயதான செளமித்ர சாட்டர்ஜி கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் 12.15 மணியளவில் செளமித்ர சாட்டர்ஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வங்காளத்தின் மிகவும் பிரபலமான நடிகரான செளமித்ர சாட்டர்ஜி பிரபல இயக்குனர் சத்யஜித் ரே வுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர் சௌமித்ர சட்டர்ஜி. 

சௌமித்ர சட்டர்ஜியின் இறப்பு, வங்காள திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சௌமித்ர சட்டர்ஜியின் இறப்பு, இந்திய திரையுலகிற்கு மாபெரும் இழப்பு என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்ட டுவீட்டில், சௌமித்ர சட்டர்ஜியின் இறப்பு, சினிமா உலகிற்கும் மிகப்பெரிய இழப்பு. மேற்கு வங்க கலையுலகிற்கு மட்டுமல்லாது இந்தியாவிற்கே பெரிய இழப்பு. வங்காள மக்களின் உணர்வுகளை திரையில் பிரதிபலித்தவர். அவரது குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

Shri Soumitra Chatterjee’s death is a colossal loss to the world of cinema, cultural life of West Bengal and India. Through his works, he came to embody Bengali sensibilities, emotions and ethos. Anguished by his demise. Condolences to his family and admirers. Om Shanti.

— Narendra Modi (@narendramodi)
click me!