நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி... இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தார்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Nov 14, 2020, 02:37 PM IST
நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி... இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தார்...!

சுருக்கம்

அவருடன் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உள்ளிட்டோரும் தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்றை கடந்து தங்களது பொருளாதார சூழலுக்கு ஏற்ற மாதிரி மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தீபாவளி நன்நாளில் நாட்டு ம க்கள் அனைவருக்கும் ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் ஆனது முதல் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருக்கும் லோங்கெவலா ராணுவ மையத்தில் தீபாவளி கொண்டாடியுள்ளார். 

அவருடன் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உள்ளிட்டோரும் தீபாவளியை கொண்டாடியுள்ளனர். நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக இல்லங்களில் தீபம் ஏற்றி மரியாதை செலுத்த கூறியுள்ளார். மேலும் ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். 

PREV
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!