ஆபரேஷன் கங்கா தொடர்பான ஆவணப்படம்.. இந்தியாவின் மன உறுதியை பிரதிபலிக்கும் என பிரதமர் மோடி பெருமிதம்

By Ramya s  |  First Published Jun 17, 2023, 4:37 PM IST

உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதில் கவனம் செலுத்திய ஆபரேஷன் கங்கா நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நினைவு கூர்ந்தார்.


ஆபரேஷன் கங்கா நடவடிக்கை குறித்து வெளியாக உள்ள ஆவணப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்த பிரதமர் மோடி, இந்த ஆவணப்படம் நடவடிக்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய தகவல்களை வழங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், "சவாலின் அளவைப் பொருட்படுத்தாமல், நமது மக்களை ஆதரிப்பதற்கான நமது உறுதியான உறுதியை ஆபரேஷன் கங்கா குறிக்கிறது. இது இந்தியாவின் அசைக்க முடியாத மனம் தளராத உணர்வையும் பிரதிபலிக்கிறது. இந்த ஆவணப்படம் இந்த நடவடிக்கை தொடர்பான அம்சங்களைப் பற்றி பல்வேறு தகவல்களை வழங்குவதாக இருக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Operation Ganga indicates our firm resolve to stand with our people no matter how daunting the challenge is. It also reflects India's indomitable spirit. This documentary would be very informative on aspects relating to this Operation. https://t.co/oWpNTiAbGR

— Narendra Modi (@narendramodi)

 

Tap to resize

Latest Videos

2022, பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய தொடங்கியது.இந்த சூழலில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியக் குடிமக்களை வெளியேற்ற இந்திய அரசாங்கம் ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தைத் தொடங்கியது. குறிப்பிடத்தக்க வெற்றியுடன், 1,000 க்கும் மேற்பட்ட நபர்கள் இந்தியாவுக்கு பாதுகாப்பாக திரும்புவதற்கு இந்த நடவடிக்கை உதவியது.

நேரு நினைவு அருங்காட்சியம் நூலகம் பெயர் மாற்றம்; காங்கிரசுக்கு பதிலடி கொடுத்த ஜேபி நட்டா!!

இந்திய மக்கள் சுமூகமாக. பாதுகாப்பாக வெளியேறும் வகையில் ஹங்கேரி, போலந்து, ருமேனியா மற்றும் ஸ்லோவாக் குடியரசு ஆகியவற்றுடன் எல்லைக் கடக்கும் இடங்களில் 24x7 கட்டுப்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டன. இந்தியர்களை வெளியேற்றும் செயல்முறை முழுவதும் உதவுவதில் இந்த மையங்கள் முக்கிய பங்கு வகித்தன. கூடுதலாக, "OpGanga ஹெல்ப்லைன்" என்ற பிரத்யேக ட்விட்டர் கணக்கு இந்த பணிக்காக நிறுவப்பட்டது. அதில் மக்களை வெளியேற்றும் நடைமுறைகள் மற்றும் தூதரக ஆலோசனைகள் உள்ளிட்ட தகவல்கள் பகிரப்பட்டன. இந்த நடவடிக்கையை ஆதரிப்பதற்காக, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகியவற்றிலிருந்து ஏறக்குறைய 20 விமானங்களை மத்திய அரசு அனுப்பியது.

இந்த ஆபரேஷன் கங்கா தொடர்பான சிறப்பு ஆவணப்படம் இன்று இரவு 8 மணிக்கு HistoryTv 18-2ல் ஒளிபரப்பாக உள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள History Tv 18 " உக்ரைனில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள், தீவிரமான போர் மண்டலத்தில் சிக்கித் தவித்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய விமான வெளியேற்றங்களில் ஒன்றை இந்தியா தொடங்கியது. 90 சிறப்பு விமானங்கள், 18 நாடுகளில் இருந்து 22,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் 147 வெளிநாட்டினரை வெளியேற்றி, வரலாற்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டன. ஹிஸ்டரிடிவி 18ல் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும்.. ‘தி இவாக்குவேஷன்: ஆபரேஷன் கங்கா’வில் உள்ள கதையைப் பாருங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம்: 'இது நம் அனைவருக்கும் பெருமை மிகு தருணம்!

click me!