
நவம்பர் 16ம் தேதி இன்று தேசிய பத்திரிகையாளர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
ஊடக நண்பர்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். குறிப்பாக செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஓய்வறியா உழைப்பை தேசிய, உலகளாவிய செய்திகளை பல்வேறு விதங்களிலும் இருந்து அளிக்கிறார்கள்... அவர்களுக்கு பாராட்டு.
சுதந்திரமான செய்தியே துடிப்பான ஜனநாயகத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. 125 கோடி இந்தியர்களின் திறன், பலம் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் ஊடகங்கள் செயல்படட்டும்.
தூய்மை இந்தியா திட்டம் கடந்த மூன்று வருடங்களில் மக்களைச் சென்றடைய ஊடகத்தின் பங்கு பாராட்டத்தக்கது. பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களின் கடின உழைப்பை பாராட்டுகிறேன். ஓய்வில்லாமல் களத்தில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களின் உழைப்புதான் தேசியத்தை கட்டமைக்க உதவுகிறது.
தற்போதைய கால கட்டத்தில் சமூக ஊடகங்களின் பங்கினை பார்க்கிறோம். கைபேசியின் வழியே பலர் செய்திகளை கவனிக்கிறார்கள். இந்த தொழில்நுட்ப வளர்ச்சி மேலும் சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் பங்கேற்க வழிகோலும் என்று தனது பாராட்டில் தெரிவித்துள்ளார் மோடி.