
ராஜஸ்தான் மாநிலத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தையே கொள்ளையர்கள் பெயர்த்து எடுத்துச் செல்லும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் நைன்வான் என்ற இடத்தில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஏ.டி.எம். மையம் இருந்தது.
இந்த ஏடிஎம். மையத்தில் இன்று இயந்திரத்தோடு சேர்ந்து பணம் கொள்ளை போயிருந்தது.
இந்த கொள்ளை குறித்த வீடியோ பதிவு காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. அதில், மையத்தில் நுழையும் 4 பேர் எவ்வித அச்சமோ, பதற்றமோ இன்றி பீரோவை நகர்த்துவது போல ஏ.டி.எம். இயந்திரத்தை வெளியே கொண்டு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் 5 லட்சம் ரூபாய் பணம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.சி.டி.வி. கேமரா காட்சிகளைக் கொண்டு, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பணத்தை இயந்திரத்தோடு கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.