றெக்கை கட்டிப் பறக்கும் சிலிண்டர், மண்ணெண்ணெய் விலை…மீண்டும் உயர்த்தி அதிர்ச்சி கொடுத்த எண்ணெய் நிறுவனங்கள்…

Asianet News Tamil  
Published : May 02, 2017, 07:39 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
றெக்கை கட்டிப் பறக்கும் சிலிண்டர், மண்ணெண்ணெய் விலை…மீண்டும் உயர்த்தி அதிர்ச்சி கொடுத்த எண்ணெய் நிறுவனங்கள்…

சுருக்கம்

price hike of cylinder

மானியத்துடம் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 2 ரூபாயும், மண்ணெண்ணெய் விலையை 26 காசுகளும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளன.

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மானிய சமையல் கியாஸ் விலையை உயர்த்தி  வருகின்றன. இந்நிலையில் மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 2 ரூபாய்  வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.. 

இதையடுத்து, சென்னையில் மானியம் நீங்கலாக இதுவரை 428 ரூபாய் 40 காசுகளாக  இருந்த சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை 430 ரூபாய் 27 காசுகளாக உயர்ந்துள்ளது. சென்னையில் மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1 ரூபாய் 87 காசுகள் அதிகரித்துள்ளது. 

இதேபோல், மானியத்துடன் வழங்கப்படும் மண்ணெண்ணெய்விலை லிட்டருக்கு 26 காசுகள் உயர்த்தப்பட்டு ள்ளது. இதையடுத்து ஒரு லிட்டர்  மண்ணெண்ணெய்  விலை 20 ரூபாயை தொட்டுள்ளது.

கடந்த மாதம் 1-ந் தேதி 14.2 கிலோ எடை கொண்ட மானிய சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 5 ரூபாய் 57 காசுகள் உயர்த்தின. தற்போது மீண்டும் 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது

எரிவாயு சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் விலையை மத்திய அரசு உயர்த்தித்க கொண்டிருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

1,750 ஏக்கரில் மாருதியின் மெகா பேக்டரி ரெடி! வருடம் 10 லட்சம் கார்கள் தயாரிப்பு.. எந்த மாநிலம் தெரியுமா?
2507 விமானங்கள் ரத்து, 3 லட்சம் பயணிகள் பாதிப்பு… இண்டிகோ மீது அரசு எடுத்த அதிரடி முடிவு