கருக்கலைப்பு சட்டத் திருத்தத்தில் அதிரடி மாற்றம்... மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

By vinoth kumarFirst Published Jan 29, 2020, 6:36 PM IST
Highlights

மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இவை இரண்டும் சேர்த்து பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்யப்பட உள்ளது.

கருக்கலைப்பு சட்டத் திருத்தத்தின்படி, தாய் அல்லது கருவில் உள்ள சிசுவின் உயிருக்கு ஆபத்து நேரிடும் பட்சத்தில் 20-லிருந்து 24 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மத்திய பட்ஜெட் வழக்கமாக பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டு பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் இவை இரண்டும் சேர்த்து பிப்ரவரி முதல் வாரத்திலேயே தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

அதில், கொரோனா வைரஸ் தாக்கம், கூட்டத்தொடரின் போது எதிர்க்கட்சிகளை சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், சில சட்டத்திருத்த மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 1971-ம் ஆண்டு கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதுள்ள கருக்கலைப்புச் சட்டப்படி, 20 வாரங்கள் வரையிலான கருவை மட்டுமே கலைக்க முடியும். ஆனால், புதிய திருத்தத்தின்படி, தாய் அல்லது கருவில் உள்ள சிசுவின் உயிருக்கு ஆபத்து நேரிடும் பட்சத்தில் 24 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருக்கலைப்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

click me!