பாஜகவிடம் வாலாட்டிய பிரசாந்த் கிஷோர்... ஒட்ட நறுக்கி வீட்டுக்கு அனுப்பிய நிதிஷ்குமார்..!

By vinoth kumarFirst Published Jan 29, 2020, 5:18 PM IST
Highlights

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற முக்கிய பங்காற்றியவர் தேர்தல் வியூக நிபுணர் பிராசந்த் கிஷோர். இதனையடுத்து பீகார் மாநிலத்தில் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளின் பேரில் நிதிஷ்குமார் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். இதனையடுத்து, நிதிஷ்குமாருடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்ததையடுதார். பின்னர், 2018-ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தள மாநில துணை தலைவராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார்.

பாஜக கொடுத்த நெருக்கடியை அடுத்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற முக்கிய பங்காற்றியவர் தேர்தல் வியூக நிபுணர் பிராசந்த் கிஷோர். இதனையடுத்து பீகார் மாநிலத்தில் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளின் பேரில் நிதிஷ்குமார் வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். இதனையடுத்து, நிதிஷ்குமாருடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்ததையடுதார். பின்னர், 2018-ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தள மாநில துணை தலைவராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார்.

பாஜகவுடன் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட்டணி வைத்திருந்தாலும் பல சமயங்களில் அக்கட்சியை விமர்சிக்க பிரசாந்த் கிஷோர் தயங்கியதில்லை. குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவை பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது எனவும் அவர் வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, டெல்லி சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், டெல்லியில் பாஜகவும் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி வைத்துள்ளது. ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வியூக நிபுணராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வைத்துள்ள நிலையில், அக்கட்சியை பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து விமர்சித்து வருவதாலும், பாஜக எதிர்ப்பு விஷயங்களில் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருவதாலும் அவர் மீது நிதிஷ்குமார் தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்தார். இதனால், பிரசாந்த் கிஷோரை கட்சியில் இருந்து நீக்க நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் அதிரடியாக நீக்கப்படுவதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். ஆனால், பாஜக கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே பிரசாந்த் கிஷோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!