prasant kishor: அவரு பாஜகவுக்காக வேலை பார்க்கிறாரு ! பிரசாந்த் கிஷோரை கலாய்த்த நிதிஷ் கட்சி

By Pothy Raj  |  First Published Oct 4, 2022, 10:14 AM IST

அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்காக வேலை பார்க்கிறார்,  பீகார் மாநிலத்தில் 3500கி.மீ தொலைவு நடைப் பயணம் செல்வதற்கு அவரிடம் பணம் எங்கிருந்து வந்தது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியுள்ளது.


அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்காக வேலை பார்க்கிறார்,  பீகார் மாநிலத்தில் 3500கி.மீ தொலைவு நடைப் பயணம் செல்வதற்கு அவரிடம் பணம் எங்கிருந்து வந்தது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியுள்ளது.


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணத்தை தொடங்கியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கி.மீ தொலைவு நடக்க உள்ளார். இதேபோல அரசியல்வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரும் பீகார் மாநிலத்துக்குள் நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார். 

Tap to resize

Latest Videos

சூதாட்ட இணையதள விளம்பரங்களைத் தவிருங்கள்: செய்தி இணையதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் துணைத் தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோர், நிதிஷ் குமாருடன் கருத்து வேறுபாடால் கட்சியிலிருந்து விலகினார். 


காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா வத்ராவை பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். ஆனால், கடைசி நேரத்தில் காங்கிரஸை விமர்சித்து கட்சியில் சேரவில்லை என்று பிரசாந்த் கிஷோர் முடிவெடுத்தார்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ் குமார், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆதரவுடன் சேர்ந்த ஆட்சி அமைத்துள்ளார். இது பாஜகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம்.. சிறைத்துறை டி.ஜி.பி. கொடூர படுகொலை..!
சமீபத்தில் பீகார் வந்திருந்த மத்திய அமைச்சர் அமித் ஷா “ நிதிஷ் குமார் முதுகில் குத்திவிட்டார். அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ், லாலுவின் கதை முடிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.


இந்த சூழலில் பிரசாந்த் கிஷோர் பீகாரில் 3500 கி.மீ நடைபயணம் செல்ல இருப்பதாகக் கூறியுள்ளதை ஐக்கிய ஜனதா தளம் விமர்சித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் கூறுகையில் “ மாநிலம் முழுவதும் பிரசாந்த் கிஷோர் பாதயாத்திரை செல்ல உள்ளார். நிதிஷ் குமார் ஆட்சியில் பீகாரில் எந்த மாதிரியான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது மக்களுக்குத் தெரியும். 


அதனால்தான் 10 ஆண்டுகளாக தொடர்ந்து நிதிஷ் குமார் முதல்வராக இருந்து வருகிறார். பிரசாந்த் கிஷோரிடம் இருந்து சான்று ஏதும் தேவையில்லை. இந்த தேசத்தில் பிறந்த அனைவருக்கும் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்ல உரிமைஉள்ளது. அதுபோல பிரசாந்த் கிஷோரும் சுதந்திரமாக நடைபயணம் செல்லட்டும்.

ராகுலின் பாதயாத்திரையில் பங்கேற்க மைசூர் வந்தார் சோனியா காந்தி... கர்நாடக காங். தலைவர் வரவேற்பு!!
பிரசாந்த் கிஷோர் தனது நடைபயணத்துக்கு என்ன வேண்டுமானலும் பெயர் சூட்டட்டும். ஆனால், அவர் பாஜகவுக்காகத்தான் வேலை பார்க்கிறார். இதுபோன் விளம்பரங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
நன்கு வளர்ந்த அரசியல் கட்சிகள் எத்தனை முறை நாளேடுகளில் அரைப் பக்கத்துக்கு விளம்பரம் செய்துள்ளன என்பதை நாம் பார்த்துள்ளோம். பிரசாந்த் கிஷோர் பாத யாத்திரை தொடங்கியுள்ளார்.

அவரின் விளம்பரத்தை வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கப்பிரிவு ஏன் கணக்கில் எடுக்கவில்லை. பிரசாந்த் கிஷோர் தரும் விளக்கம் என்னவெனில், தனக்கு பின்னால் ஆளும் பாஜக உள்ளது மட்டும்தான்.” எனத் தெரிவித்துள்ளார்.


பீகார் மாநிலத்தில் பக்ஸர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். தற்போது தொழில்முறை அரசியல் ஆலோசனை, வியூகம் வகுப்பதை நிறுத்திவிட்டு, தனது சொந்த மாநிலத்தை மிகப்பெரிய மாற்றத்தைக்கு கொண்டு செல்லப்போவதில் பிரசாந்த் கிஷோர் ஆர்வம் காட்டியுள்ளார்.


 

click me!