
ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் சிறைத்துறை டி.ஜி.பி. மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா (57). இவர் சிறைத்துறை டி.ஜி.பி. 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார்.
இதையும் படிங்க;- காந்தியை கொன்றவர்களுக்கு எதிராகத்தான் இந்த யாத்திரை.. கொட்டும் மழையில் கர்ஜித்த ராகுல் காந்தி.. மாஸ் பேச்சு.
இந்நிலையில், லோஹியா நேற்று வீட்டில் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக உடனே உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், அவரது கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குடும்ப பிரச்சனை காரணமாக அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை அரங்கேறி இருக்கலாம் என கூறியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜம்மு - காஷ்மீர் வந்துள்ள நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- பீர் கேன்களுடன் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்... இணையத்தில் வைரலான வீடியோ!!