பாஜக தேசியத் தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்தோடு முடிவடையவதையடுத்து, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
பாஜக தேசியத் தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்தோடு முடிவடையவதையடுத்து, அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
பாஜகவின் அடுத்த தேசியத் த லைவர் பதவிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தீவிரமாகப் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ncrb: இந்தியாவில் தினசரி 89 பெண்கள் பலாத்காரம்; ஒருமணிநேரத்துக்கு 49 குற்றம்: என்சிஆர்பி தகவல்
தற்போது தேசியத் தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாவிட்டால், அடுத்த தலைவராக தர்மேந்திர பிரதாந் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
2024ம்ஆண்டு தேர்தல் வரையிலும் ஜே.பி.நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கலாம் என்றும் அல்லது அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு வழங்கலாம் என்று பாஜக மேலிடம் பேசி வருகிறது.
அதேநேரம், ஜே.பி.நட்டாவுக்கு பதிலாக புதிய தலைவரைத்தேர்ந்தெடுக்க முடிவு எடுத்தால், அது தர்மேந்திர பிரதானுக்கு வாய்ப்பு செல்லலாம் என்றும் தெரிகிறது. பாஜகவைப் பொறுத்தவரை தேசியத் தலைவராக வருபவர் தொடர்ந்து 2 முறை பதவியில் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக மூத்த தலைவர் ஒருவர் பேசுகையில் “ ஜே.பி.நட்டா தனக்கு ஓர் ஆண்டு நீட்டிப்பை விரும்பாவிட்டால், அடுத்த தலைவராக வருவதற்கு தர்மேந்திர பிரதானுக்கு வாய்ப்புள்ளது.
மற்றொருவர் பெயரும் பரிசீலிக்கப்படுகிறது, அது பூபேந்திர யாதவ். தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா வந்தபின் சிறப்பாக செயல்படுவதால், அவருக்கு ஓர் ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம்”எனத் தெரிவித்தார்
பாஜக வட்டடாரங்கள் கூறுகையில் “ஜே.பி.நட்டா தலைமையில் பல மாநிலங்களில் பாஜக செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. ஆதலால், அவருக்கு 2முறையாக தலைவர் பதவி தரப்படலாம்” எனத் தெரிவிக்கின்றன.
தர்மேந்திர பிரதான் செயல்பாடு அனைத்தும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி போன்று இருக்கும். கட்சிக்கு சிக்கலான சூழல் வரும்போதெல்லாம் அந்தப் பொறுப்புகளை பிரதமர் மோடி, தர்மேந்திரபிரதானிடம் வழங்குவார்.
அவரும் அந்தச் சிக்கல்களை சிறப்பாக களைந்துவிடுவார். தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு போராடியபோது கல்வி அமைச்சகத்தை ரமேஷ் பொக்ரியாலிடம் இருந்து தர்மேந்திர பிரதானிடம் வழங்கியது அவரும் அதை எளிதாகக் கையாண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.