
பிரதமர் மோடிக்கான வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. தனது உணவுச் செலவை தானே ஏற்றுக்கொள்கிறார் என்றும், அரசு பட்ஜெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவிடப்படுவதில்லை என்றும் பிரதமர் அலுவலகத்திற்கான செயலாளர் பினோத் பிஹாரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது வீடு மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு கிடைத்த பதிலில், ''பிரதமரின் இல்லம் (பிஎம் அவாஸ்) மத்திய பொதுப்பணித் துறையாலும், வாகனங்களின் பொறுப்பு சிறப்பு பாதுகாப்புப் படையாலும் பாதுகாக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிரதமர் மோடியின் சம்பளம் குறித்த கேள்வியும் கேட்கப்பட்டு இருந்தது. இதற்கான பதிலில், விதிகளுக்கு உட்பட்டே, ஆண்டு வருமானம் அதிகரிக்கப்படுகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.
ncrb: இந்தியாவில் தினசரி 89 பெண்கள் பலாத்காரம்; ஒருமணிநேரத்துக்கு 49 குற்றம்: என்சிஆர்பி தகவல்
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். இதற்குப் பிறகு, மார்ச் 2, 2015 அன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அவர் நாடாளுமன்ற கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள கேன்டீனுக்கு சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.
நாடாளுமன்றத்தில் இயங்கும் கேன்டீனில் தற்போதைய அரசு பல சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஜனவரி 19, 2021 அன்று நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தார். 2021ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, நாடாளுமன்ற கேன்டீனுக்கு மட்டும் ரூ.17 கோடி மானியமாக செலவிடப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அருணாச்சலப்பிரதேச எல்லையை சீன உரிமை கொண்டாடுவது அட்டூழியம்: இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் அதிர்ச்சி