புதுச்சேரி முழுவதும் மின்சாரம் துண்டிப்பு.. இருளில் மூழ்கிய புதுச்சேரி.. மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் !

By Raghupati RFirst Published Oct 1, 2022, 11:08 PM IST
Highlights

புதுச்சேரி முழுவதும் மின்விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி அரசின் மின் துறையை தனியார்மயமாக்க டெண்டர் அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மின் துறை பொறியாளர்கள், ஊழியர்கள் உருவாக்கிய போராட்ட குழு செப்டெம்பர் 28 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மின் துறை தலைமையகத்தில் இன்று 4வது நாளாக அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால் மின் பழுது, பராமரிப்பு, அலுவல் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரி மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின்பராமரிப்பின்றி மின் தடை ஏற்பட்டுள்ளது. சீர் செய்ய ஆளின்றி நீண்ட நேரம் மின் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க..‘60 % கமிஷன் வந்தே ஆகணும் !’ ஊராட்சி தலைவர்களிடம் கமிஷன் கேட்ட ஆம்பூர் திமுக MLA - வைரல் வீடியோ

புதுச்சேரி முழுவதும் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பல மணி நேரமாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் நான்கு மணி நேரத்தை தாண்டியும் மின் வெட்டு நீடிப்பதால், அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க..இன்ஸ்டாகிராம் காதலில் குழந்தையை பெற்றெடுத்த +1 வகுப்பு மாணவி - அதிர்ச்சி சம்பவம்

இருளில் மூழ்கிய புதுச்சேரி - போராட்டத்தில் குதித்த மக்கள் pic.twitter.com/USt67NEJA0

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

அதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார்2 கிலோமீட்டர்களுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த மறியல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி அரசு எப்பொழுது மின்சார பிரச்சனைக்கு தீர்வு கட்டும் என்பதே பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.

இதையும் படிங்க..கேரளா மூத்த சிபிஎம் தலைவர் மறைவு - யார் இந்த கொடியேரி பாலகிருஷ்ணன் ?

click me!