வகுப்பிற்குள் மாணவியை பூட்டிவிட்டு சென்ற விவகாரம்.. தலைமையாசிரியர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்..

By Thanalakshmi VFirst Published Oct 1, 2022, 4:18 PM IST
Highlights

உத்தரபிரதேசத்தில் 2 ஆம் வகுப்பு மாணவியை வகுப்பிற்குள் வைத்து தவறுதலாக பூட்டிவிட்டு சென்ற விவகாரத்தில் தலைமையாசிரியர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
 

புலந்த்சாகிர் மாவட்டத்தில் செக்டா பிர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியில் 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வகுப்பிற்குள் தூக்கிக்கொண்டு இருப்பதை கவனிக்காமல், பள்ளி முடிந்ததும் ஊழியர்கள் வகுப்பினை பூட்டிவிட்டு சென்றுள்ளார். 

பின்னர் தூக்கத்திலிருந்து விழித்த மாணவி, செய்வதறியாது கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் கதறல் சத்தம் அதிகமாகவே, அக்கம் பக்கத்தினர் கூடியுள்ளனர்.வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாத குழந்தையை தேடி அவரது தந்தை, பள்ளிக்கூடத்திற்கு வந்துள்ளார்.

அறையின் ஜன்னல் அருகே நின்று குழந்தை அழுதுக்கொண்டு இருந்துள்ளது. பின்னர் தகவல் தெரிவிக்கபட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் ஆசிரியர்கள், வகுப்பறையை திறந்து  மாணவியை மீட்டனர். 

மேலும் படிக்க:புதுவையில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான கள்ளச் சாராயம் அழிப்பு

மாணவி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுக்குறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரி முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. முதற்கட்ட விசாரணைக்கு பின்னர், மாணவியை வகுப்பிற்குள் வைத்து பூட்டி சென்ற விவகாரத்தில் தலைமையாசிரியர், 3 ஆசிரியர்கள், 2 ஊழியர்கள் என 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் குலாத்தியில் நடைபெற்ற ஆசிரியர் சங்க தேர்தலுக்கு செல்வதற்காக தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பொறுப்பில் குழந்தைகளை விட்டுவிட்டு முன்னதாக சென்றுள்ளது தெரியவந்துள்ளது.  

 மேலும் படிக்க:தாஜ் மஹாலை ஷாஜகான் கட்டியதற்கு ஆதாரம் இல்லை: உண்மையைக் கண்டறிய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

click me!