kharge:மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகல்:சிதம்பரத்துக்கு பதவி?

By Pothy RajFirst Published Oct 1, 2022, 1:47 PM IST
Highlights

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, வேட்புமனுத் தாக்கல் செய்ததையடுத்து, தனது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, வேட்புமனுத் தாக்கல் செய்ததையடுத்து, தனது மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் கட்சியில் ஒருநபருக்கு, ஒருபதவி என்ற விதி இருப்பதால், காங்கிரஸ் தலைவராகியபின், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தொடர முடியாது என்பதால், கார்கே ராஜினாமா செய்தார். இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று இரவு கார்கே அனுப்பி வைத்தார்.

காமராஜரும் காங்கிரஸ் கட்சியும்: கிங்மேக்கர் வகுத்த‘கே-பிளான்’: மறந்ததால் சரிந்தது

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜூன கார்கேவை எதிர்த்து திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் போட்டியிடுகிறார். ஆனால், காங்கிரஸ் தலைமையின் ஆதரவு கார்கேவுக்கு இருப்பதால், அடுத்ததலைவர் பதவி கார்கேவுக்குத்தான் கிடைக்கும். 

அதேசமயம், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மல்லிகார்ஜூன கார்கே ராஜினாமா செய்துவிட்டதால், அந்தப் பதவி மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் அல்லது திக்விஜய் சிங் இருவரில் ஒருவருக்கு  வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூருக்கு அடுத்தார்போல் ஜார்க்கண்டிலிருந்து கே.என் திரிபாதி போட்டியிடுகிறார். ஆனால், அவரால் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்த இயலாது.

பாம்பிற்கு முத்தம் கொடுக்க முயன்ற போது உதட்டில் கொத்து வாங்கிய பாம்பு பிடி வீரர்..!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்திலிருந்து யாரும் போட்டியிடமாட்டார்கள் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இதனால் அடுத்த தலைவராக யாரை நிறுத்துவது என காங்கிரஸ்மேலிடம் தீவிரமாக ஆலோசித்தது.

இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஏ.கே.அந்தோனி, அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், ஆனந்த் சர்மா, பூபேந்திர்சிங் ஹூடா, பிரிதிவிராஜ் சவான், மணிஷ் திவாரி ஆகியோரின் பெயர்கள்பேசப்பட்டன. இறுதியாக மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தலைவராகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி.. கூட்டத்தில் மைக் இல்லாமல் பேசியதால் பரபரப்பு. வீடியோ வைரல்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 80வயதான மல்லிகார்ஜூன கார்கே, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். கடந்த காங்கிரஸ்ஆட்சியில் மத்திய அமைச்சராகவும், அதன்பின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் கார்கே இருந்துள்ளார். கார்கேவுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி அளித்ததுள்ளதால், கர்நாடகத்தில் நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்கட்சியின் வாக்குமதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

click me!