புதுவையில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான கள்ளச் சாராயம் அழிப்பு

By Dinesh TGFirst Published Oct 1, 2022, 1:12 PM IST
Highlights

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள ஆந்திரா கடலோர பகுதியில் ரகசியமாக காய்ச்சி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 32 சாராய ஊரல்களை ஏனாம் கலால் துறையினர் படகில் சென்று அழித்தனர்.

புதுச்சேரி மாநிலம் ஏனாம் கடலோரப் பகுதிகளில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக ஏனாம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் கடலோர காவல் நிலைய காவல் கண்காணிப்பாளர் சிவகணேஷ் உத்தரவின் பேரில் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் மக்கள் வசிக்காத தீவுகள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தீவுகளுக்கு சென்று கலால் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஏனாம், சாவித்திரி நகரின் தீவு எண் 2க்கு மிக அருகில் மற்றும் எதிரே உள்ள ஆந்திராவின் ஐ போலவரம் எல்லையில் உள்ள தீவு, சதுப்புநில காடுகளில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது.

பாம்பிற்கு முத்தம் கொடுக்க முயன்ற போது உதட்டில் கொத்து வாங்கிய பாம்பு பிடி வீரர்..!

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கலால் துறை போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் 32 பெரிய பிளாஸ்டிக் பீப்பாய்களில் ஒவ்வொன்றிலும் 200 லிட்டர் சாராய ஊறல் என மொத்தம் 6 ஆயிரத்து 400 லிட்டர்கள் நாட்டு சாராய ஊறல் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி.. கூட்டத்தில் மைக் இல்லாமல் பேசியதால் பரபரப்பு. வீடியோ வைரல்

இதனையடுத்து சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட மூலப் பொருட்கள், அடுப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சாராய ஊறல்களை கீழே ஊற்றி அழித்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த ஏனாம் காவல் துறையினர் கள்ளச்சாராயம் காச்சிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

click me!