கேரள மூத்த சிபிஎம் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்.. அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள் !

Published : Oct 01, 2022, 09:06 PM ISTUpdated : Oct 01, 2022, 09:15 PM IST
கேரள மூத்த சிபிஎம் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்.. அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள் !

சுருக்கம்

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட சிபிஎம் கட்சியின் மூத்த அரசியல்வாதியான கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 68.

உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிய பாலகிருஷ்ணன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2015 முதல் 2022 வரை, கோடியேரி பாலகிருஷ்ணன் CPI (M), கேரள மாநிலக் குழுவின் செயலாளராக பணியாற்றினார். வி.எஸ் அச்சுதானந்தன் அமைச்சராக இருந்த காலத்தில் உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார்.

1987ல், டெல்லிச்சேரி தொகுதியில் இருந்து கேரள சட்டமன்றத்திற்கு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 - 2006 யூ.டி.எஃப் ஆட்சியின் போது அவர் துணை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அவர் 2011 இல் பிரதி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்தார். அவர் கட்சியின் மாநிலச் செயலாளராக இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

இதையும் படிங்க..‘60 % கமிஷன் வந்தே ஆகணும் !’ ஊராட்சி தலைவர்களிடம் கமிஷன் கேட்ட ஆம்பூர் திமுக MLA - வைரல் வீடியோ

கொடியேரி பாலகிருஷ்ணன், நவம்பர் 16, 1953 இல் பிறந்தார், கொடியேரி ஓனியன் உயர்நிலைப் பள்ளி, மாஹே மகாத்மா காந்தி கல்லூரி மற்றும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் தனது கல்வியை முடித்தார். மாஹே மகாத்மா காந்தி கல்லூரியில் படிக்கும் போதே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவு மூலம் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.

இதையும் படிங்க..கணக்கு தெரியுமா..தரமில்லாத பொங்கல் பரிசா.? அண்ணாமலையை விளாசிய அமைச்சர் சக்கரபாணி!

அவர் SFI இன் கேரள மாநிலக் குழுவின் செயலாளராகவும் அதன் அகில இந்திய இணைச் செயலாளராகவும் இருந்தார். 1980 களின் முற்பகுதியில் DYFI இன் கண்ணூர் மாவட்டத் தலைவராகவும் பணியாற்றினார். எமர்ஜென்சி காலத்தில் 16 மாதங்கள் சிறையில் இருந்தார். எஸ்.ஆர்.வினோதினியை மணந்த அவருக்கு பினோய் கொடியேரி மற்றும் பினீஸ் கொடியேரி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதையும் படிங்க..இன்ஸ்டாகிராம் காதலில் குழந்தையை பெற்றெடுத்த +1 வகுப்பு மாணவி - அதிர்ச்சி சம்பவம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!