உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட பெண்களுக்கான கருப்பை வாய் தடுப்பூசி அடுத்த சில மாதங்களில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட பெண்களுக்கான கருப்பை வாய் தடுப்பூசி அடுத்த சில மாதங்களில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஹியூமன் பாபிலோமா வைரஸ்(Human Papilloma Virus) என்ற வைரஸால் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் வருகிறது. இந்த வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்து இந்திய மருத்துவவிஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தடுப்பூசி அடுத்த சில மாதங்களில்சந்தைக்கு மிகக் குறைந்த விலையாக ரூ.200 முதல் ரூ.400க்கு விற்பனைக்கு வர உள்ளது.
கர்ப்பபை வாய் புற்றுநோய் தடுப்பூசி கண்டுபிடிப்பு நிறைவடைந்தது குறித்த நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடந்தது. இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா சிஇஓ ஆதார் பூனாவல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் பேசுகையில் “ இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கருப்பை வாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி அனைத்து மக்களும் வாங்கும் விலையில் அறிமுகம் செய்யவதை அரசுஉறுதி செய்யும். இந்த தடுப்பூசியின் கண்டுபிடிப்பு, உருவாக்கம் எனஅனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டது.
‘நிழல்உலக தாதா’ தாவுத் இப்ராஹிம் பற்றி தகவல் அளித்தால் ரூ.25 லட்சம் பரிசு: என்ஐஏ அறிவிப்பு
அடுத்ததாக சில மாதங்களில் சந்தைக்கு விற்பனைக்கு வரும். கொரோனா வைரஸ் வந்ததன் மூலம் மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது, அதுபோல கருப்பைவாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு பெண்கள் இதை செலுத்திக்கொள்வார்கள்” எனத் தெரிவித்தார்
சீரம் மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா கூறுகையில் “ கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி மிகவும் குறைந்த விலையில் சாமானிய மக்கள் வாங்கும் விலையில் அறிமுகப்படுத்தப்படும். அதாவது ரூ.200 முதல் ரூ.400 விலையில் கிடைக்கும். மத்திய அரசுடன் விரிவான ஆலோசனை நடத்தியபின் விலை குறித்த அறிவிப்பு வெளியாகும்.
கருப்பை வாய் புற்றுநோய்க்கு இருக்கும் பிற தடுப்பூசிகளின் விலையோடு ஒப்பிடும்போது இதன் விலை மிகக் குறைவாக இருக்கும்.முதல்கட்டமாக இந்த தடுப்பூசி அரசு மருத்துவமனைகளுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் வழங்கப்படும், அதன்பின் படிப்படியாக தனியாருக்கு வினியோகம் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்
கருப்பை வாய் புற்றுநோய் வரும் பெண்களைப் பொறுத்தவரை உலகஅளவில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. சராசரியாக 15 முதல் 44 வயதுள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. பிற வெளிநாட்டு தடுப்பூசிகள் விலை அதிகமாக இருக்கும் உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.