Air Pollution in Delhi: காற்றுமாசு நோய்: டெல்லி-என்சிஆர் பகுதியில் ஐந்தில் 4 குடும்பங்கள் பாதிப்பு

Published : Nov 05, 2022, 05:30 PM ISTUpdated : Nov 05, 2022, 05:31 PM IST
Air Pollution in Delhi: காற்றுமாசு நோய்: டெல்லி-என்சிஆர் பகுதியில் ஐந்தில் 4 குடும்பங்கள் பாதிப்பு

சுருக்கம்

டெல்லி என்சிஆர் பகுதிகளில் காற்று மாசால் ஏற்படும் நோய்களுக்கு 5 குடும்பங்களில் 4 குடும்பங்கள் கடந்த சில வாரங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

டெல்லி என்சிஆர் பகுதிகளில் காற்று மாசால் ஏற்படும் நோய்களுக்கு 5 குடும்பங்களில் 4 குடும்பங்கள் கடந்த சில வாரங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 

லோக்கல் சர்க்கில் எனும் தொண்டு நிறுவனம் டெல்லி, என்சிஆர் காற்று மாசு குறித்து 19ஆயிரம் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் 18 சதவீதம் பேர் ஏற்கெனவே காற்று மாசு தொடர்பான நோய்களுக்காக மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

தேசிய கீதத்துக்கு இணையான மரியாதை வந்தே மாதரம் பாடலுக்கும் மக்கள் தர வேண்டும்: மத்திய அரசு பதில்

இந்த ஆய்வில் பங்கேற்ற குடும்பங்களில் 80 சதவீதம் பேரில் குடும்பத்தில் ஒருவர் காற்று மாசு தொடர்பாக நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறு தொடர்பான பிரச்சினையைச் சந்தித்து வருகிறார்கள். காற்று மாசால் சுவாசக் கோளாறு மட்டுமல்லாமல் ஏதாவது ஒருநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் டெல்லி, நொய்டா, காஜியாபாத், குருகிராம், பரிதாபாத் ஆகியவற்றில் ஆய்வில் பங்கேற்றவர்களில் 63% பேர் ஆண்கள். டெல்லி என்சிஆர் பகுதிகளில் 5 குடும்பங்களில் 4 குடும்பங்களில் காற்று மாசு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 சதவீதம் பேர் மட்டுமே காற்று மாசால் எந்த உடல்நலக் கோளாறும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

மூச்சு முட்டும் காற்று மாசு ! டெல்லியில் தொடக்கப்பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை

13 சதவீதம் பேர் காற்றுமாசால் பாதிக்கப்படவில்லை, டெல்லி என்சிஆர் பகுதியில் தாங்கள் வசிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். காற்று மாசிலிருந்து தப்பிக்க சிலர் தற்காலிகமாக டெல்லி, என்சிஆர் பகுதியைவிட்டு இடம் பெயரந்துள்ளனர். 

தீபாவளிப் பண்டிகைக்கு பின், டெல்லி, என்சிஆர் பகுதியைச் சேர்ந்த 70 சதவீதம் மக்களில் குடும்பத்தில் ஒருவர் காற்று மாசு தொடர்பான உடல்நலப் பிரச்சினையை அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளனர். இது தீபாவளி முடிந்த 5 நாட்களில் 10ச தவீதமாக உயர்ந்தது. 13 சதவீதம் பேர் காற்று மாசுக்கு அஞ்சியும், உடல்நலத்தை பாதுகாக்கவும், டெல்லி, என்சிஆர் பகுதியை விட்டு தற்காலிகமாக இடம் பெயர்ந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

அன்று ஆடம்பரம் இன்று அவசியமானது ! டெல்லியில் காற்று சுத்திகரிப்பான் கருவிகள் விற்பனை ஜோர்!

இவ்வாறு ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

டெல்லி என்சிஆர்பகுதியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது. மனிதர்கள் உடல் நலத்துக்கு மோசமான பாதிப்பு ஏற்படும் வகையில் காற்று மாசு குறியீடு 500க்கு மேல் அதிகரித்தது. காற்றுமாசு டெல்லியில் பல்வேறு இடங்களில் 430க்கு மேல் இருந்தது. இந்தஅளவு காற்று மாசுக் குறியீடு மனிதர்களின் உடல்நலத்துக்கு உகந்தது அல்ல. 

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்: கண்காணிப்பை தீவிரப்படுத்திய இந்திய கடற்படை

பஞ்சாப்,ஹாரியானா மாநிலங்களில் வேளான் கழிவுகளை எரிப்பதால் வரும்புகை, கழிவுகளை எரிப்பதால் உருவாகும் புகை, நொய்டா, டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுகள் ஆகியவற்றால் காற்று மோசமடைந்துள்ளது. 

இதனால் காற்றின் தரம் மேம்படும்வரை, ஆரம்பப் பள்ளிகளுக்குவிடுமுறை அளித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் டெல்லி அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!