தேசிய கீதத்துக்கு இணையான மரியாதை வந்தே மாதரம் பாடலுக்கும் மக்கள் தர வேண்டும்: மத்திய அரசு பதில்

By Pothy RajFirst Published Nov 5, 2022, 4:55 PM IST
Highlights

தேசிய கீதமான ஜன கன மன பாடலுக்கு இணையான மரியாதைய தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலுக்கும் மக்கள் தர வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய கீதமான ஜன கன மன பாடலுக்கு இணையான மரியாதைய தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலுக்கும் மக்கள் தர வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய கீதமான ஜன கன மன பாடலுக்கு இணையான மரியாதையை வந்தே மாதரம் பாடலுக்கு மக்கள் தர உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில்  பாஜகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயே பொதுநலன் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், உள்துறை அமைச்சகம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இந்தியா ஆக்கிரமித்த இமாலயப் பகுதிகளை மீட்போம்: நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி சர்ச்சைப் பேச்சு

உள்துறை அமைச்சகம் சார்பில்  வழக்கறிஞர் மணிஷ் மோகன் ஆஜராகி பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார் அதில் “தேசிய கீதத்தைப் போல 'வந்தே மாதரம்' பாடும்போதும், இசைக்கும் போதும் பின்பற்ற வேண்டிய விதிகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்கள் இல்லை.

இருப்பினும், இந்த பாடல் இந்தியர்களின் உணர்ச்சிகளிலும் ஆன்மாவிலும் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பாடல் குறித்து உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கூறிய அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுகின்றன. 

ட்விட்டர் ஊழியர்களை நீக்கியது சரியா?அமெரிக்க சட்டம் சொல்வது என்ன? மஸ்க் மீது வழக்கு

மக்கள் தேசிய கீதமான ஜன கன மன பாடலுக்கு என்னவிதமான மரியாதை செலுத்துகிறார்களோ அதற்கு இணையான மரியாதையை வந்தே மாதரம் பாடல் பாடும்போது, இசைக்கும் போதும் வழங்கிட வேண்டும். தேசிய பாடல், தேசிய கீதம் ஆகிய இரண்டுமே புனிதத்துவம் வாய்ந்தவை. ஆதலால் இரு பாடலுக்கும் ஒரே மாதிரியான மரியாதை செலுத்த வேண்டும்.

தேசிய கீதம் பாடலைப் போல், வந்தே மாதரம் பாடல் பாடும் போது பின்பற்ற வேண்டிய விதிகள், எந்த சூழலில் பாடலாம், இசைக்கலாம் என்ற வழிகாட்டி நெறிமுறைகள் இதுவரை இல்லை. இருப்பினும் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அவ்வப்போது கூறும் வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

இஸ்ரேலின் அடுத்த பிரதமராகிறார பெஞ்சமின் நெதன்யாகு: 90 சதவீத வாக்குகள் எண்ணிக்கையில் உறுதி

இந்த மனுவில் கூறப்பட்டுள்ள சில பரிந்துரைகள் தனிமனிதர்களின் சிந்தனைகள். நிர்வாக ரீதியாகவும், சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் முன், இவை தீவிரமாக ஆலோசிக்கப்பட வேண்டியவை” எனத் தெரிவித்துள்ளது.
 

click me!