குரங்குகள் தாக்குதலில் தப்பிக்க ஓட்டம்! மாடியிலிருந்து தவறி விழுந்து விவசாயி பலி: உ.பி.யில் பரிதாபம்

By Pothy RajFirst Published Nov 5, 2022, 2:30 PM IST
Highlights

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் குரங்குகள் துரத்தியதில் மாடியில் தூங்கிய விவசாயி தப்பிக்க முயன்றபோது மாடியிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம், பரேலியில் குரங்குகள் துரத்தியதில் மாடியில் தூங்கிய விவசாயி தப்பிக்க முயன்றபோது மாடியிலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பரேலி நகரைச் சேர்ந்தவர் முகேஷ் குமார்(வயது40). விவசாயம் செய்து வந்தார். முகேஷ் குமார் நேற்றுமுன்தினம் மாலை தனது வீட்டின் மாடியின் மீது தூங்கினார். அப்போது குரங்குகள் கூட்டம் ஒன்று முகேஷ் குமாரைத் தாக்கின. குரங்குகளிடம் இருந்து தப்பிக்க முகேஷ் குமார் ஓடியபோது மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதில் முகேஷ் குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் இமாச்சலில் 106 வயதில் காலமானார்: 34-வது முறை வாக்களித்தார்!

உடனடியாக, முகேஷ் குமாரை அக்கம்பக்கத்தினர் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முகேஷ் குமார் உறவினர் ஒருவர்கூறுகையில் “ மாடியில் தூங்கிய முகேஷ் குமாரை குரங்குகள் திடீரென தாக்கின. குரங்குகளிடம் இருந்து தப்பிக்க முகேஷ் குமார் ஓடும் போது குரங்குகள் அவரைத் துரத்தின. இதில் மாடியில் நிலைகுலைந்து முகேஷ் கீழே விழுந்தார். அவரைத் தூக்கியபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது, காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டிருந்தது” எனத் தெரிவித்தார்

மசால் தோசை, பில்டர் காபியில் மயங்கிய ஸ்டார்பக்ஸ் இணை நிறுவனர்: பெங்களூரு வித்யார்த்தி பவன் பெருமை

மண்டல வனப் பாதுகாப்பு அதிகாரி சமீர் குமார் கூறுகையில் “ உயிரிழந்தநபர் குரங்குகள் துரத்தியதால் மாடியிலிருந்து விழுந்து இறந்தாரா அல்லது எதேச்சையாக விழுந்தாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். குரங்குகளைக் கண்டால் மக்கள் யாரும் அச்சப்பட்டு ஓட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்

கடந்த ஜூலை மாதத்தில் இருந்து பரேலி மாவட்டத்தில் திடீரென குரங்குக் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை ஆன்டிரேபிஸ் தடுப்பூசி செலுத்த அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

இந்தியாவின் ட்விட்டர் நிறுவனத்தில் அனைத்து ஊழியர்களும் நீக்கம்: மார்க்கெட்டிங் டீமே காலி!

கடந்த செப்டம்பர் மாதம் 5வயது சிறுவன் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது குரங்குகள் அவனைத் தாக்கின. குரங்குகளுக்கு பயந்து சிறுவன் ஓடியபோது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தான்.
கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி, புதான் நகரில் 51வயதான விவசாயி ஒருவர் குரங்குகள் தாக்கியதில் உயிரிழந்தார். இதே நகரில் 35வயதான பெண்ணும் குரங்குகள் துரத்துவதற்கு அஞ்சி வீட்டின் மாடியிலிருந்து கீழே இறங்கியபோது விழுந்து உயிரழந்தார்.

கடந்த ஜூலை 15ம் தேதி ஒரு பெண்ணிடம் இருந்து 4வயது குழந்தையை குரங்குகள் பறித்துக்கொண்டு சென்று வீசி எறிந்து கொன்றது குறிப்பிடத்தக்கது

click me!