Latest Videos

தீ போல பரவும் செய்தி.. பாஜகவில் இணைந்தாரா பிரசாந்த் கிஷோர்? காங்கிரஸ் சொன்னது உண்மையா? அவரே கொடுத்த விளக்கம்!

By Ansgar RFirst Published May 23, 2024, 9:46 PM IST
Highlights

Prashant Kishor : தேர்தல் வியூகவாதியும் அரசியல்வாதியுமான பிரசாந்த் கிஷோரை தங்கள் தேசிய செய்தித் தொடர்பாளராக பாஜக நியமித்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகி வருகின்றது.

பாரதிய ஜனதா கட்சி (பாஜக), தேர்தல் வியூகவாதியும் அரசியல்வாதியுமான பிரசாந்த் கிஷோரை தங்கள் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமித்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு ஸ்கிரீன் ஷாட் வைரலாக பரப்பப்பட்டு வருகின்றது. ஆனால் பிரசாந்த் கிஷோரின் கட்சியான ஜான் சுராஜ், பாஜக வெளியிட்டுள்ள கடிதம் என்று கூறி இணையத்தில் பகிரப்பட்டு வரும் அந்த அறிக்கை போலியானது என்று தெரிவித்துள்ளது.

பிரசாந்த் கிஷோரின் கட்சி காங்கிரஸைத் தாக்கி பேசியுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெய்ராம் ரமேஷ் போலியான ஒரு விஷயத்தை இணையத்தில் பகிர்ந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். அதன் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், ஜான் சுராஜ் ஒரு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார், அந்த ஆவணத்தை வாட்ஸ்அப்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் பகிர்ந்துள்ளார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

“உங்கள் பொய்களால் மக்களை பிளவுப்படுத்த முடியாது..” ப.சிதம்பரத்திற்கு ராஜீவ் சந்திரசேகர் பதிலடி..

மேலும் பிரஷாந்த் கிஷோர் வெளியிட்ட X பக்க பதிவில் காங்கிரஸும், ராகுல் காந்தியும் போலியான செய்திகளைப் பற்றிப் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் கம்யூனிகேஷன்ஸ் தலைவரும், மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் தனிப்பட்ட முறையில் தன்னை பற்றிய ஒரு போலி ஆவணத்தை எப்படிப் பரப்புகிறார் என்பதை இப்போது நீங்களே பாருங்கள் என்று கூறியுள்ளார். 

Look at the irony! ,
You all talk about fake news and claim to be the victims. Now see yourself how the head of Communications of Congress Party, , apparently a senior leader, is personally circulating a fake document. pic.twitter.com/NJFrKhznU9

— Jan Suraaj (@jansuraajonline)

கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக பிரசாந்த் கிஷோரை நியமித்ததாகக் கூறும் பாஜக லெட்டர்ஹெட் படம் வெளியாகியுள்ளது. இது X மற்றும் Facebook இல் பல பயனர்களால் பகிரப்பட்டுள்ளது. செவ்வாயன்று பிரபல நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் வெற்றி கிடைக்கும் என்று திரு கிஷோர் கணித்ததை அடுத்து அந்த புகைப்படம் வெளியாகி வைரலானது.

கடந்த 2014 தேர்தலின் போது பிரதமர் மோடி மற்றும் பாஜகவுடன் இணைந்து பணியாற்றிய திரு கிஷோர், இந்தத் தேர்தலில் பிஜேபியின் எண்ணிக்கை அதன் 2019 மதிப்பெண்ணான 303 அல்லது அதை விட சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை: கேரளத்தின் சதித் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது - அன்புமணி கோரிக்கை

click me!