மலேரியாவுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடித்த ஜே.என்.யூ. விஞ்ஞானிகள்!

By SG Balan  |  First Published May 23, 2024, 2:47 PM IST

டெல்லி ஜே.என்.யூ.வில் மூலக்கூறு மருத்துவத்திற்கான சிறப்பு மையத்தில் பேராசிரியர் ஷைல்ஜா சிங் மற்றும் பேராசிரியர் ஆனந்த் ரங்கநாதன் தலைமையில் மலேரியா மருத்து குறித்த ஆராய்ச்சி வெற்றிகரமான முடிவைக் கொடுத்துள்ளது.


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் குழு, மலேரியாவிற்கு எதிரான மிகவும் பயனுள்ள தடுப்பு மற்றும் சிகிச்சை உத்திகளுக்கு வழி வகுக்கும் தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது.

இது குறித்து ஆய்வுக்கட்டுரை iScience அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. தடுப்பூசியை உருவாக்க  ப்ரோஹிபிடின் புரதத்தை பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. மலேரியா, பெண் அனாபிலிஸ் கொசுவால் பரவும் நோய். பல ஆண்டுகளாக உலகில் கோடிக்கணக்கான உயிர்களைக் கொன்ற மலேரியா இந்தியாவிலும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

தொடர்ச்சியான முயற்சிகள் இருந்தபோதும் மலேரியாவுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் உலக சுகாதார அமைப்பின் 2022ஆம் ஆண்டு அறிக்கையில், உலகளவில் 2.49 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 60,800 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி ஜே.என்.யூ.வில் மூலக்கூறு மருத்துவத்திற்கான சிறப்பு மையத்தில் பேராசிரியர் ஷைல்ஜா சிங் மற்றும் பேராசிரியர் ஆனந்த் ரங்கநாதன் தலைமையில் மலேரியா மருத்து குறித்த ஆராய்ச்சி வெற்றிகரமான முடிவைக் கொடுத்துள்ளது.

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: ஓட்டேரா உள்பட 3 ஹோட்டல்களுக்கு வந்த ஈமெயில்!

"எங்கள் ஆய்வில், PHB2-Hsp70A1A ரிசெப்டர் லிகண்ட் ஜோடியை நாங்கள் கண்டறிந்துள்ளோம், இது மனித ஹோஸ்டுக்குள் பாராசைட் புரதத்தைப் பெற உதவுகிறது. இந்த பாராசைட் புரதம் PHB2 ஒரு சக்திவாய்ந்த தடுப்பூசியாக செயல்படக்கூடும்" என்று பேராசிரியர் ஷைலஜா சிங் விளக்குகிறார்.

புரோஹிபிடின்கள் என்பது மைட்டோகாண்ட்ரியல் செயல்பாடு, செல் சுழற்சி கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு செல்லுலார் செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் புரதங்களின் குடும்பமாகும்.

மெரோசோயிட் மேற்பரப்பில் காணப்படும் PfPHB2 புரதம், சிவப்பு ரத்த அணு மேற்பரப்பில் உள்ள Hsp70A1A புரதத்துடன் தொடர்புகொள்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். திரிபுராவைச் சேர்ந்த மலேரியா நோயாளி ஒருவருக்கு PfPHB2 ஆன்டிபாடிகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

"PfPHB2 ஆன்டிபாடிகள் இருப்பது மலேரியா சிகிச்சை வளர்ச்சியை நோக்கிய ஒரு நம்பிக்கைக்குரிய திருப்புமுனையாகும்" என்று ஆய்வாளர் மனிஷா மரோத்தியா கூறுகிறார். தங்கள் கண்டுபிடிப்புகளை எலிகளைக் கொண்டு சோதனை செய்து சரிபார்க்கவும் விஞ்ஞானிகள் குழு திட்டமிட்டுள்ளது.

வெற லெவலுக்கு சென்ற AI மோகம்... சாட்ஜிபிடியை காதலிப்பதாக அறிவித்த இளம்பெண்!

click me!