Latest Videos

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: ஓட்டேரா உள்பட 3 ஹோட்டல்களுக்கு வந்த ஈமெயில்!

By SG BalanFirst Published May 23, 2024, 1:01 PM IST
Highlights

பெங்களூருவில் வெடிகுண்டு மிரட்டல் வந்த 3 ஹோட்டல்களிலும் வெடிபொருட்களைத் தேடுவதற்காக மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் குழு அனுப்பப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள மூன்று ஹோட்டல்களுக்கு வியாழக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் அந்த ஹோட்டல்களில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5  ஸ்டார் ஹோட்டலான ஓட்டேரா ஹோட்டல் உள்ளிட்ட 3 ஹோட்டல்களிலும் வெடிபொருட்களைத் தேடுவதற்காக மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் குழு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பெங்களூரு மாநகரின் நகர்ப்புற பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் மேசைகள் மற்றும் பெஞ்சுகளுக்கு அடியில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விமானத்தில் ஸ்டாண்டிங்! இண்டிகோ விமானத்தில் நின்றுகொண்டே சென்ற பயணியால் பரபரப்பு!

ஹுலிமங்கலவில் உள்ள ட்ரீமிஸ் பள்ளியில் உள்ள அதிபருக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் ஈமெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அப்பகுதியில் சுமார் மூன்று மணிநேரம் விரிவான தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 1ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவூட்டத்தக்கது.

புல்வாமா தாக்குதலில் தொடர்பு... முதியவரை மிரட்டி ரூ.32 லட்சம் அபேஸ் செய்த வாட்ஸ்அப் மோசடி கும்பல்!

click me!