"மும்பையில் இருந்து வாரணாசிக்கு செல்லும் பணிகளுக்கான இருக்கை ஒதுக்கீட்டில் ஒரு தவறு ஏற்பட்டுவிட்டது. காத்திருப்பு பட்டியலில் இருந்த ஒரு பயணிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது" என இண்டிகோ தெரிவித்துள்ளது.
மும்பையில் இருந்து வாரணாசிக்குப் புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தில் நின்றபடியே பயணித்த பயணியால் விமானம் மீண்டும் கிளம்பிய இடத்திற்கே திரும்பியது. இதனால் மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7.50 மணிக்கு இண்டிகோ விமானம் 6E 6543 வாராணசிக்கு புறப்பட்டது. விமானத்தில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில், ஒரு பயணிகளில் மட்டும் இருக்கை இல்லாமல் கடைசி வரிசையில் நின்றுகொண்டே இருந்தார்.
விமானப் பணியாளர்கள் யாரும் அவர் ஏன் நின்றுகொண்டே இருக்கிறார் என்று விசாரிக்காத நிலையில், விமானம் மும்பையில் இருந்து வாரணாசி நோக்கி புறப்பட்டது. வானில் பறப்பதற்கு முன் ஓடுபாதையில் ஊர்ந்து 'டாக்ஸிங்' செய்துகொண்டிருந்த நிலையில் தான் ஒரு விமான பணியாளர் நின்றிருந்த பயணியை கவனித்து விசாரித்தார்.
நயன்தாரா முதல் சமந்தா வரை... பாக்ஸ் ஆபிஸ் மட்டுமில்ல பிசினஸ்லயும் இவங்க தான் டாப்!
அவர் இருக்கை இல்லாமல் நின்றபடி வருவதை அறிந்ததும் விமானம் உடனே புறப்பட்ட டெர்மினலுக்கே திரும்பிச் சென்றது. நின்றுகொண்டே வந்த பயணியை இறக்கிவிட்டு, சுமார் ஒரு மணிநேர தாமதத்துக்குப் பின் மீண்டும் வாராணசிக்குக் கிளம்பியது.
இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் "மும்பையில் இருந்து வாரணாசிக்கு செல்லும் பணிகளுக்கான இருக்கை ஒதுக்கீட்டில் ஒரு தவறு ஏற்பட்டுவிட்டது. காத்திருப்பு பட்டியலில் இருந்த ஒரு பயணிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"புறப்படுவதற்கு முன்பு இந்தத் தவறு கவனிக்கப்பட்டது. நின்றுகொண்டே சென்ற அந்தப் பயணி இறக்கிவிடப்பட்டார். இதனால் சிறிது தாமதம் ஏற்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்” என்றும் கூறப்பட்டுள்ளது.
மனித விந்தணுக்களில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆண்மைக்குறைவு அதிகரிக்கும் அபாயம்!