நன்கொடை பெற்று கோடிகளில் புரளும் கட்சிகள்: ரூ. 614.53 கோடியுடன் பாஜக முன்னிலை; காங்கிரசுக்கு ரூ. 95.46 கோடி!!

By Dhanalakshmi GFirst Published Nov 30, 2022, 10:45 AM IST
Highlights

மத்தியில் ஆளும் பாஜக 614.53 கோடி ரூபாயை 2021-22 ஆம் நிதியாண்டில்  நன்கொடையாக பெற்று இருப்பதாக இந்திய  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது எதிர்க்கட்சியான காங்கிரஸால் திரட்டப்பட்ட நிதியை விட ஆறு மடங்கு அதிகமாகும்.

காங்கிரஸ் கட்சிக்கு 95.46 கோடி ரூபாய் நன்கொடை நிதியாக கிடைத்து இருப்பதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 43 லட்சம் ரூபாயும், கேரளாவில் ஆட்சியில் இருக்கும் சிபிஎம் கட்சிக்கு 10.05 கோடி ரூபாயும் நன்கொடையாக  கிடைத்துள்ளது.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் 2021ஆம் ஆண்டில், மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்தது. கேரளாவிலும், அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது. நான்கு தேசியக் கட்சிகளும் சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் தங்களது சமீபத்திய நன்கொடை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்திருந்தன. இந்த நிலையில் இந்த தகவலை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. 

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்; புதிய அறிவிப்பு!!

தனிநபர் நன்கொடையாளர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ரூ.20,000-க்கும் அதிகமான நன்கொடை தொடர்பான வருடாந்திர அறிக்கையை கட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் தெரிவித்து இருக்கிறது. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தவிர, தேர்தல் அறக்கட்டளைகளும் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கின்றன. 

டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, மூன்று மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக, ரூ.44.54 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில் ஆணையத்திடம் சமர்ப்பித்த சமீபத்திய தணிக்கை அறிக்கையில் ரூ.30.30 கோடியை செலவாக ஆம் ஆத்மி கட்சி காட்டியுள்ளது. டெல்லி மற்றும் பஞ்சாப் தவிர, கோவாவிலும் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது.

Gujarat Election 2022:சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை கேள்வி எழுப்பிய காங்கிரஸின் வாக்குவங்கி தீவிரவாதம்: மோடி பேச்சு!!

இவை தவிர குஜராத் மாநிலத்தில் மட்டும் கிடைக்கப் பெற்ற நன்கொடையில் 94% பாஜக பெற்று இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த அசோசியேஷன் தெரிவித்துள்ளது. இந்த நன்கொடை தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த ஐந்தாண்டுகளில் பெறப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2018 மார்ச் மாதம் முதல் 2022 அக்டோபர் மாதம் வரை மொத்தம் ரூ. 174 கோடி நன்கொடையாக பத்திரங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. இதில் பாஜகவுக்கு மட்டும் ரூ. 163 கோடி கிடைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ரூ 10.5 கோடியும், ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ. 32 லட்சமும் கிடைத்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு ரூ. 20 லட்சம் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பத்திரங்கள் 2017-2018 ஆம் ஆண்டுகளில் விற்கப்பட்டுள்ளன. 

click me!