கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் 58 வயது முதியவர் வயிற்றில் இருந்து 187 காசுகளை அறுவை சிகிச்சையின் மூலம் கர்நாடக மருத்துவர்கள் நீக்கி சாதனை படைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் 58 வயது முதியவர் வயிற்றில் இருந்து 187 காசுகளை அறுவை சிகிச்சையின் மூலம் கர்நாடக மருத்துவர்கள் நீக்கி சாதனை படைத்துள்ளனர்.
பாஹல்கோட்டில் உள்ள ஹெச்எஸ்கே மருத்துவமனையில் அந்த முதியவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.
திபெத்திய புத்த மடாதிபதியாக 4 வயது சிறுவன் தேர்வு!இமாச்சலப் பிரதேசத்தில் அலங்கார ஊர்வலம்
58வயதான முதியவர பெயயர் திம்பப்பா ஹரிஜன். இவர் சிஸ்ஸோபெர்னியா எனும் நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சிலநாட்களுக்கு முன் திம்மப்பா வயிறு பெரிதாக, பலூன்போல் ஊதிவிட்டது. வயிறு வலியால் திம்பப்பா துடித்தார். இதையடுத்து, திம்மப்பாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குடும்பத்தினர் வந்தனர்.
அப்போது, திம்மப்பாவின் வயிற்றை எஸ்கே எடுத்து பார்த்தபோது, மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திம்மப்பா வயிற்றில் ஏராளமான காசுகள் சிதறிக்கிடப்பதைக் கண்டனர். இதையடுத்து, எஸ்டோஸ்கோபி செய்து வயிற்றில் காசுகள் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
திம்மப்பாவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, திம்மப்பா வயிற்றில் இருந்து 1.20 கிலோ எடையுள்ள 187 காசுகளை நீக்கினர். இதில் 5ரூபாய் காசுகள் 56, 2 ரூபாய் நாணயங்கள் 51, 80 ஒரூரூபாய் நாணயங்களை மீட்டனர்.
நடைபயணத்தால் எனக்குள் மாற்றம் வந்திருக்கிறது: ராகுல் காந்தி வெளிப்படை
இது குறித்து மருத்துவர் ஈஸ்வர் கலாபுர்கி கூறுகையில் “ உண்மையாகவே சவாலான அறுவைசிகிச்சையாக இருந்தது. நோயாளியின் வயிறு முழுவதும் காசாக சிதறிக்கிடந்தது. ஏறக்குறைய 187 காசுகள், 1.20 கிலோஎடையுள்ள நாணயங்களை வெளியே எடுத்தோம். 5ரூபாய், 2ரூபாய், ஒருருபாய் நாணயங்களை எடுத்தோம்.
நோயாளி காசுகளை விழுங்கி வந்ததால், குறிப்பிட்ட இடைவெளியில் அவரின் வயிறு பலூன்போல் வீங்கிவிட்டது. நோயாளி காசுகளை விழுங்கி வந்ததையும், அவரின் குடும்பத்தார் கவனிக்கவில்லை.
நோயாளிக்கு வயிற்றுவலி கடுமையாக அதிகரித்தபின்புதான் சிகிச்சைக்காகக் கொண்டு வந்தனர். நாங்களும் எக்ஸ்ரே, என்டோஸ்கோபி மூலம் பார்த்துதான் வயிற்றில் நாணயங்கள் இருப்பதை உறுதி செய்து, அதை நீக்கினோம்” எனத் தெரிவித்தார்
அமிர்தசரஸ் எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன் சுட்டுவீழ்த்தப்பட்டது: பிஎஸ்எப் படையினர் அதிரடி
திம்மப்பா மகன், ரவிகுமார் கூறுகையில் “ என் தந்தை காசுகளை விழுங்கினார் என்பதை நாங்கள் கவனிக்கவில்லை. மனதளவில் சிறிது பாதிப்பு அவருக்கு இருந்தாலும், மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல்,அவருடைய பணியை அவர் கவனித்துக்கொள்வார். காசுகளை விழுங்கிவிட்டேன் என்று என் தந்தையும் என்னிடம் கூறவில்லை.
சில நாட்களுக்கு முன் என் தந்தை தூங்கிக்கொண்டிருந்தபோது வயிற்றுவலியால் துடித்தார், வயிறும் வீங்கியிருந்தது, இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு ஸ்கேன்,எக்ஸேர், என்டோஸ்கோபி எடுத்தபின்புதான் வயிற்றில் நாணயங்கள் இருப்பது தெ ரியவந்தது” எனத் தெரிவித்தார்