நொய்டா காவல்துறையின் புதிய தலைவராக லக்ஷ்மி சிங் நியமனம்… யார் இவர்?

By Narendran SFirst Published Nov 29, 2022, 4:42 PM IST
Highlights

உத்தரபிரதேச அரசு ஐபிஎஸ் அதிகாரி லக்ஷ்மி சிங் நொய்டா காவல்துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

உத்தரபிரதேச அரசு ஐபிஎஸ் அதிகாரி லக்ஷ்மி சிங் நொய்டா காவல்துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மாநிலத்தில் காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கவுதம புத்த நகரில் அலோக் சிங்கிற்குப் பதிலாக 2000 ஆவது பேட்ச் அதிகாரி, புதன்கிழமை பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாரணாசி, ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள 16 இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) அதிகாரிகளின் இடமாற்றம் செய்து உ.பி அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதில் உத்தரபிரதேச அரசு ஐபிஎஸ் அதிகாரி லக்ஷ்மி சிங் நொய்டா காவல்துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைவர் அலோக் சிங்கிற்குப் பதிலாக லக்ஷ்மி சிங் புதன்கிழமை பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 1995 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அலோக் சிங், மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரலாக (ஏடிஜிபி) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆந்திர முதல்வர் தங்கை ஷர்மிலா ரெட்டி அமர்ந்திருந்த காரை கிரேனில் இழுத்துச்சென்ற ஹைதராபாத் போலீஸ்

48 வயதான லக்ஷ்மி, லக்னோ ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றி வருகிறார். UPSC நடத்திய தேர்வில் முதல் பெண் ஐபிஎஸ் டாப்பர் (ஒட்டுமொத்தமாக 33வது ரேங்க்) என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் சிறந்த தகுதிகாண் தேர்வாளராக தேர்வு செய்யப்பட்டார். பயிற்சியின் போது அவருக்கு பிரதமரின் வெள்ளி பட்டன் மற்றும் உள்துறை அமைச்சரின் கைத்துப்பாக்கியும் வழங்கப்பட்டது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பி.டெக் பட்டம் பெற்ற இவர், 2004ல் முதன்முறையாக மூத்த போலீஸ் சூப்பிரண்டு பதவியை பெற்றார். 2013ல் துணை ஐஜியாக பதவி உயர்வு பெற்ற அவர், 2018ல் ஐஜியாக பதவி உயர்வு பெற்றார். லக்ஷ்மி முன்பு 2018 ஜனவரி 1 முதல் மார்ச் 5, 2018 வரை கவுதம் புத் நகரில் சிறப்பு அதிரடிப் படையின் (STF) ஐஜி/டிஐஜியாக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு, அவர் மார்ச் 2018 முதல் 2020 மே 26 வரை மீரட்டில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளியின் ஐஜியாக நியமிக்கப்பட்டார், அதற்கு முன்பு லக்னோ ரேஞ்ச் ஐஜியாக மாற்றப்பட்டார்.

இதையும் படிங்க: குஜராத்தில் காங்கிரஸ் கூட்டத்தில் புகுந்த மாடு; பாஜகவின் சதி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு!!

மாநில அரசு, கடந்த வாரம், காசியாபாத், ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய மூன்று மாவட்டங்களில் மூன்று புதிய போலீஸ் கமிஷனரேட்டுகளை அறிவித்தது. இது லக்னோ, கவுதம் புத்த நகர் (நொய்டா), வாரணாசி மற்றும் கான்பூரில் ஏற்கனவே உள்ள நான்கு இடங்களுக்கு கூடுதலாக இருந்தது. லக்னோ மற்றும் கௌதம் புத் நகரில் உள்ள கமிஷனரேட்டுகள் ஜனவரி 2020 இல் நிறுவப்பட்டன, அவை மார்ச் 2021 இல் வாரணாசி மற்றும் கான்பூரில் அமைக்கப்பட்டன. நொய்டா காவல்துறையின் புதிய நொய்டா காவல்துறைத் தலைவர் லக்னோவின் சரோஜினி நகர் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் ED அதிகாரி ராஜேஷ்வர் சிங்கை மணந்தார். மேலும் லக்ஷ்மி 2016ல் போலீஸ் பதக்கத்தையும், 2020 மற்றும் 2021ல் உ.பி டிஜிபியின் வெள்ளி மற்றும் தங்கப் பதக்கங்களையும் பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு உ.பி முதல்வரின் சிறந்த சேவைப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.

click me!