Sharmila Reddyஆந்திர முதல்வர் தங்கை ஷர்மிலா ரெட்டி அமர்ந்திருந்த காரை கிரேனில் இழுத்துச்சென்ற ஹைதராபாத் போலீஸ்

By Pothy Raj  |  First Published Nov 29, 2022, 3:28 PM IST

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஒய்எஸ்டிஆர்பி கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஷர்மிலா  ரெட்டி, முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியபோது அவர் காரில் அமர்ந்திருந்தபோது காரோடுசேர்த்து போலீஸார் கிரேன் மூலம் இழுத்துச் சென்றனர்.


தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஒய்எஸ்டிஆர்பி கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஷர்மிலா  ரெட்டி, முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியபோது அவர் காரில் அமர்ந்திருந்தபோது காரோடுசேர்த்து போலீஸார் கிரேன் மூலம் இழுத்துச் சென்றனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Tap to resize

Latest Videos

நடைபயணத்தால் எனக்குள் மாற்றம் வந்திருக்கிறது: ராகுல் காந்தி வெளிப்படை

தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சி நடத்துகிறது. முதல்வராக கே.சந்திரசேகர் ராவ் உள்ளார். அடுத்தமுறையும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவும், தேசிய அளவில் கட்சியைக் கொண்டுசெல்லவும், தனது கட்சியின் பெயரை பாரதிய ராஷ்ட்ரிய சமிதி என்று மாற்றியுள்ளார். 

தெலங்கானாவில் 2023ம் ஆண்டிலும் ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் கேசிஆர் தீவிரமாக திட்டம் தீட்டி காய்களை நகர்த்தி வருகிறார். ஆனால், பாஜக, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம், காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்ற இப்போதிருந்தே பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. 

 

| Hyderabad: Police drags away the car of YSRTP Chief Sharmila Reddy with the help of a crane, even as she sits inside it for protesting against the Telangana CM KCR pic.twitter.com/i7UTjAEozD

— ANI (@ANI)

இந்நிலையில் தெலங்கானாவில் உள்ள எடுகுரி சந்தின்தி ராஜசேகரா தெலங்கானாகட்சி (ஒஸ்எஸ்டிஆர்பி) கட்சியின் தலைவர் ஷர்மிலா ரெட்டி, இன்று ஹைதராபாத்தில் தெலங்கானா முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.

திபெத்திய புத்த மடாதிபதியாக 4 வயது சிறுவன் தேர்வு!இமாச்சலப் பிரதேசத்தில் அலங்கார ஊர்வலம்

இந்தப் போராட்டத்துக்கு போலீஸார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து போராட்டத்தின் இடையே கட்சித் தலைவர் ஷர்மிலா ரெட்டி அமர்ந்திருந்த காரை, கிரேன் மூலம் ஹைதராபாத் போலீஸார்கட்டி இழுத்துச் சென்றனர். ஐதராபாத்தின் பரபரப்பான சாலையில், ஒரு கட்சித் தலைவர் அமர்ந்திருக்கும் காரை, கிரேன் மூலம் ஹைதராபாத் போலீஸார் இழுத்துச் சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

click me!