கத்தார் நாட்டில் நடந்து வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியியில் அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸியின் ஆட்டத்தைக் காண வேண்டும் என்பதற்காக கேரளாவில் இருந்து கால்பந்து ரசிகை ஒருவர் மகிந்திரா நிறுவன்தின் தார் ஜீப்பை ஓட்டிச் சென்றுள்ளார்.
கத்தார் நாட்டில் நடந்து வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியியில் அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸியின் ஆட்டத்தைக் காண வேண்டும் என்பதற்காக கேரளாவில் இருந்து கால்பந்து ரசிகை ஒருவர் மகிந்திரா நிறுவன்தின் தார் ஜீப்பை ஓட்டிச் சென்றுள்ளார்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் உலகளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கத்தாரில் நடக்கும் இந்த கால்பந்து உலகக் கோப்பை என்பது, நட்சத்திர வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இருவர் பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும்.
ஆதலால், இருவரின் ஆட்டத்தைக் காண வேண்டும் என்பதற்காக அவரின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.சிலர் டிக்கெட் எடுத்து கத்தார் நாட்டுக்குச் செல்கிறார்கள், ஏராளமான ரசிகர்கள் இருவரின் ஆட்டத்தையும் தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கிறார்கள்.
இதில் சற்று வித்தியாசமானவர் கேரளாவைச் சேர்ந்த 33வயது பெண் நிஜாரா நவுசத் என்ற கால்பந்து ரசிகை கத்தார் நாட்டுக்கு மற்ற ரசிகர்கள் போல் விமானத்தில் செல்லவி்லலை. மாறாக, கேராளாவில் இருந்து ஜீப் ஓட்டிச் சென்று கால்பந்து போட்டிகளை பார்க்க நஜாரா நவுசத் புறப்பட்டார்.
இதற்காக கேரளாவில் இருந்து 2,973கி.மீ ஜீப்பை நிஜாரா நவுசத் ஓட்டி கத்தார் சென்றடைந்தார்.
சாலை மார்க்கமாக நவுசத் சென்றபோது, பல நாடுகளின் எல்லைக்களைக் கடந்து சென்றுள்ளார். குறிப்பாக ஐக்கிய அரபுஅமீரகம், குவைத், சவுதி அரேபியா ஆகியவற்றை சாலை வழியாகக் கடந்து கத்தாரை நவுசத் அடைந்தார்.
திபெத்திய புத்த மடாதிபதியாக 4 வயது சிறுவன் தேர்வு!இமாச்சலப் பிரதேசத்தில் அலங்கார ஊர்வலம்
தனது பயண அனுபவத்தை நவுசத் தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்துள்ளார். இந்த பயணத்தில் நவுசத் மட்டும் செல்லாமல் தன்னுடைய 5 குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.
இதற்காக நஜாரா நவுசத் மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் தார் ஜீப்பை பயன்படுத்தினார்.
முதலில் நவுசத் தனது ஜீப் மற்றும் குழந்தைகளுடன் கேரளாவில் இருந்து ஓமன் நாட்டுக்கு கப்பல் மூலம், சென்றார். அதன்பின் ஓமன் நாட்டிலிருந்து, ஜீப் ஓட்டத் தொடங்கிய நவுசத் ஐக்கிய அரபுஅமீரகம், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியாஆகிய நாடுகளைக் கடந்து கத்தார் சென்றடைந்தார்.
கத்தார் செல்லும்வரை தனது பயண அனுபவங்கள் அனைத்தையும், இன்ஸ்டாகிராமில், நவுசத் பகிர்ந்துள்ளார். இதில் நவுசத் பதிவி்ட்ட சில போஸ்ட் வைரலாகின. நவுசத்தின் பயணத்தைப் பார்த்து பிரம்மித்த பலரும் தாங்களும் இதேபோன்று பயணிக்க ஆர்வம் காட்டியுள்ளனர்.