பாரத் ஜோடோ யாத்திரையால் எனக்குள் மாற்றங்கள் வந்திருப்பதை உணர்கிறேன், அதிகமான பொறுமை வந்துள்ளது, மற்றவர்கள் சொல்வதை கவனித்து கேட்கும் திறன் வந்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்
பாரத் ஜோடோ யாத்திரையால் எனக்குள் மாற்றங்கள் வந்திருப்பதை உணர்கிறேன், அதிகமான பொறுமை வந்துள்ளது, மற்றவர்கள் சொல்வதை கவனித்து கேட்கும் திறன் வந்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம், தமிழகம், கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மாநிலங்களைக் கடந்து மத்தியப் பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 7-வது நாளாக நடக்கும் ராகுல் காந்தி இந்தூரில் இருந்து உஜ்ஜைன் நகரத்துக்கு செல்கிறார்.
Rahul Gandhi: பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது புல்லட், சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த ராகுல் காந்தி !
இந்நிலையில் இந்தூரில் ராகுல் காந்தி நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த நடைபயணத்தால் மிகப்பெரிய மனநிறைவான சம்பவங்கள் பல நடந்தன, அதில் சிலவற்றை மட்டும் உங்களுக்காக நினைவுபடுத்த முடியும். இந்த பாரத் ஜோடோ யாத்திரையால், என்னுடைய பொறுமை அதிகரித்துள்ளது.
2வதாக, என்னை யாரேனும் தள்ளினாலும், இழுத்தாலும் என்னை 8மணி நேரம் துன்புறத்தினாலும் நான் எரிச்சலடையமாட்டேன். இது என்னை ஒருபோதும் பாதிக்காது இதற்குமுன் வெறும் 2 மணிநேரத்தில் நான் எரிச்சலடைந்துவிடுவேன்.
நடைபயணத்தின்போது, வலியை உணரந்தேன், அதனை அனுபவிக்க வேண்டும் என்பதால், அதை கைவிடவில்லை. நடைபயணத்தின் மூலம் என்னால் பிறர் கூறுவதை காது கொடுத்து சிறப்பாக கேட்க முடிகிறது. என்னிடம் யாரேனும் வந்து ஏதாவது கூறினால், நான் அதிகமாக கவனிக்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் எனக்கு மிகவும் நன்மையளிக்கின்றன
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கர்நாடக அரசு தீவிரம்! முதல்வர் பசவராஜ் பொம்மை சூசகம்
என் முழங்கால்களில் ஏற்கெனவே காயம்பட்டு ஆறிய இடங்களில் இருந்து அதிகமான வலியை நான் நடைபயணம் தொடங்கியபோது உணர்நேன். இந்த வலியால் எனக்கு அசவுகரியங்கள் நடந்தாலும், என்னால் நடக்க முடியும் என்று நம்பினேன். இப்போது வலி என்ற விஷயத்தைப் பற்றி கேள்வியே இல்லை. சில விஷயங்கள் உங்களை தொந்தரவு செய்யும் விதத்தில் இருந்தாலும், அதை எதிர்கொண்டு, அதற்குஏற்றால்போல் மாறிக்கொண்டு செல்லவேன்
என்னை மக்கள் நடக்கும் போது தள்ளிக்கொண்டே வந்தது எனக்கு தொந்தரவாக இருந்தது. அப்போதுதான் சிறிய குழந்தை எங்களுடன் சேர்ந்து நடந்தார். 7வயதிருக்கும் என்னிடம் வந்து ஒரு கடிதத்தை அந்த சிறுமி வழங்கினார். . அந்த குழந்தை சென்றபின் அவர் அளித்த கடிதத்தை படித்துப் பார்ததேன். அதில் நீங்கள் தனியாக நடக்கிறேன் என்று எண்ணாதீர்கள். நான் உங்களுடன் வருகிறேன்.
குஜராத் தேர்தல்: இதுதான் உங்கள் பாடமா? அமித் ஷாவை விளாசிய அசாசுதீன் ஒவைசி
என்னால் உங்களுடன் சேர்ந்து நடக்க முடியும், ஆனால் என் பெற்றோர் அனுமதிக்க மறுக்கிறார்கள். ஆனால், நான் உங்களுடந் நடப்பேன்.
இதுபோன்ற ஆயிரக்கணக்கான உதாரணங்களை இந்த நடைபயணத்தில் கூற முடியும். ஆனால், இந்த உதாரணம்தான் என் மனதில் உடனுக்குடன் வந்தது
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்