பிபிசி சேனல் தயாரி்த்துள்ள பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த விவகாரத்தில் உடனடியாக முதல்வர் பினராயி விஜயன் தலையிட்டு நிறுத்தவேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
பிபிசி சேனல் தயாரி்த்துள்ள பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிட கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த விவகாரத்தில் உடனடியாக முதல்வர் பினராயி விஜயன் தலையிட்டு நிறுத்தவேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதைத் தொடர்ந்து பெரிய அளவிலான கலவரமும் ஏற்பட்டது.
பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்தை யூடியூப், ட்விட்டரில் வெளியிடத் தடை
இந்த கலவரத்தில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து பிபிசி சேனல், “ India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் என எந்த சமூக வலைத்தளத்திலும் இந்த ஆவணப்படத்துக்கான லிங்குகளை பதிவிடக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆனால், மத்திய அரசின் எதிர்ப்பை மீறி தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆவணப்படத்தை பார்த்துவிட்டனர். அடுத்ததாக கேரளஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் பிபிசி ஆவணப்படத்தை திரையிடத் தயாராகி வருகிறது. இது தொடர்பான அறிவிப்பையும் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதேபோல எஸ்எப்ஐ அமைப்பும், காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பும், மோடியின் ஆவணப்படத்தை கேரளாவில் திரையிடுவோம் என்று அறிவித்து களமிறங்கியுள்ளன.
கேரள காங்கிரஸ் கட்சி கூறுகையில் வரும் குடியரசு தினத்தன்று மாவட்டத்தின் தலைநகரில் பிபிசி எடுத்த பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் திரையிடப்படும் என்று அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தை கேரளாவிலும் திரையிட மாணவர்கள் ஏற்பாடு
ஆனால், கேரளாவில் அரசியல் கட்சிகளின் செயல்பாட்டுக்கு பாஜக கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் கூறுகையில் “ பிபிசி ஆவணப்படத்தை கேரளாவில் திரையிடும் விவகாரத்தில் உடனடியாக முதல்வர் பினராயி விஜயன் தலையிட்டு நிறுத்த வேண்டும்.
இதுபோன்ற செயல்கள் தேசத்துரோகமானது. நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையான்மையை குலைக்க அந்நிய சக்திகளுக்கு நாம் அனுமதி கொடுப்பது போன்றாகும். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளை மீண்டும் நினைவுபடுத்துவது மதரிதீயான பதற்றத்தை தூண்டிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஒளிபரப்பால் சர்ச்சை
மத்திய அமைச்சர் வி. முரளிதரனும், முதல்வர் பினராயி விஜயனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் “ பிபிசி தயாரித்த பிரதமர் மோடியின் ஆவணப்படத்தை திரையிட அனுமதி வழங்கக்கூடாது, உடனடியாக இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும்”எ னத் தெரிவித்துள்ளார்