பிரதமர் மோடி குறித்து பிபிசி சேனல் தயாரித்துள்ள ஆவணப்படத்தை கேரளாவில் திரையிடுவதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI) ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
பிரதமர் மோடி குறித்து பிபிசி சேனல் தயாரித்துள்ள ஆவணப்படத்தை கேரளாவில் திரையிடுவதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI) ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
கடந்த 2022ம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதைத் தொடர்ந்து பெரிய அளவிலான கலவரமும் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து தேசியஅளவிலும், சர்வதேச அளவிலும் கண்டனங்கள் எழுந்தன.
பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்தை யூடியூப், ட்விட்டரில் வெளியிடத் தடை
பிபிசி சேனல், பிரதமர் மோடி குறித்து “ India:The Modi Question” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படம் இரு பகுதிகளாக எடுக்கப்பட்டுள்ளது.
கோத்ரா கலவரத்தில் சிறுபான்மையினர்களை பாதுகாக்க அப்போது இருந்த பாஜக அரசும், குஜராத் காவல் துறையும் தவறிவிட்டது என்று கோத்ரா கலவரம் குறித்து விசாரித்த பிரிட்டன் எம்.பி.க்கள் குழு இந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளது.
இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப மத்திய அரசு தடைவிதித்துள்ளது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் என எந்த சமூக வலைத்தளத்திலும் இந்த ஆவணப்படத்துக்கான லிங்குகளை பதிவிடக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த படத்தை ஏற்கெனவே தெலங்கனா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் திரையிட்டு பார்த்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேரள ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பும் திரையிடுவது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஒளிபரப்பால் சர்ச்சை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி மறுத்துள்ள மத்திய அ ரசின் முடிவுக்கு காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கொசுறு! 30 லட்சம் காலியாக இருக்கு! 71,000 பேருக்குத்தான் வேலையா: காங்கிரஸ் விளாசல்
அதேசமயம்,முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 302 பேர் பிபிசியின் ஆவணப்படத்தை கடுமையாகச் சாடியுள்ளனர். எங்கள் தலைவர் குறித்து உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட குற்றப்பத்திரிகை என்று குற்றம்சாட்டியுள்ளனர்.