PM Modi BBC documentary:பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஒளிபரப்பால் சர்ச்சை

By Pothy RajFirst Published Jan 24, 2023, 11:44 AM IST
Highlights

பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம்இந்தியாவில் திரையிட தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம்இந்தியாவில் திரையிட தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் வெளியே கசிந்ததையடுத்து, அது குறித்து விரிவான விசாரணைக்கும், அறிக்கைத் தாக்கல் செய்யவும் பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நேதாஜிக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இலக்கு ஒன்றுதான்! மோகன் பகவத் பேச்சு

இந்த பிபிசி ஆவணப்படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் “சகோதரத்துவ இயக்கம்-ஹைதராபாத் பல்கலைக்கழகம்” என்ற பெயரில் திரையிடப்பட்டுள்ளது. 

ஆனால்,பல்கலைக்கழக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட்டு பார்ப்பதற்கு முன்பாக மாணவர்கள் அமைப்பு எங்களிடம் எந்த அனுமதியும் கோரவில்லை. பல்கலைக்கழகத்தில் உள்ள ஏபிவிபி அமைப்பினர் எங்களிடம் வந்து புகார்அளித்தபின்புதான், பல்கலைக்கழகத்தில் இதுபோன்று ஆவணப்படம் திரையிடப்பட்ட விவரம் தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில் “ பல்கலைக்கழகத்தில் பிபிசி ஆவணப்படம் திரையிடப்பட்டது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் யாரும் அளிக்கவில்லை” எனத் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படத்தை யூடியூப், ட்விட்டரில் வெளியிடத் தடை

ஹைதராபாத் பல்கலைக்கழக சகோதரத்துவ அமைப்பு கடந்த 21ம் தேதி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படமான இந்தியா:தி மோடி குவெஸ்டின்” படத்தை திரையிடப்போகிறோம்” எனத் தெரிவித்திருந்தனர்.

கடந்த 2022ம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதைத் தொடர்ந்து பெரிய அளவிலான கலவரமும் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து தேசியஅளவிலும், சர்வதேச அளவிலும் கண்டனங்கள் எழுந்தன. 
இந்நிலையில் பிபிசி சேனல், பிரதமர் மோடி குறித்து “ India:The Modi Question”  என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படம் இரு பகுதிகளாக எடுக்கப்பட்டுள்ளது. 

கோத்ரா கலவரத்தில் சிறுபான்மையினர்களை பாதுகாக்க அப்போது இருந்த பாஜக அரசும், குஜராத் காவல் துறையும் தவறிவிட்டது என்று கோத்ரா கலவரம் குறித்து விசாரித்த பிரிட்டன் எம்.பி.க்கள் குழு இந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளது. 

கொசுறு! 30 லட்சம் காலியாக இருக்கு! 71,000 பேருக்குத்தான் வேலையா: காங்கிரஸ் விளாசல்

இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப மத்திய அரசு தடைவிதித்துள்ளது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் என எந்த சமூக வலைத்தளத்திலும் இந்த ஆவணப்படத்துக்கான லிங்குகளை பதிவிடக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

இந்நிலையில், ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

click me!