லூடோ கேமில் வளர்ந்த காதல்.. பாகிஸ்தான் பொண்ணு - இந்தியா பையன் - கடைசியில் அதிர்ந்து போன போலீசார்.?

By Raghupati R  |  First Published Jan 23, 2023, 9:29 PM IST

நேபாள எல்லை வழியாக பாகிஸ்தானிய பெண்ணை சட்டவிரோதமாக அழைத்து வந்ததை அடுத்து,பெண்ணின் காதலன் கைது செய்யப்பட்டார்.


உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபர் கைது செய்யப்பட்டார். போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததற்காக மைனர் பாகிஸ்தானிய பெண் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சட்டவிரோதமாக தங்கியிருந்த அவர்கள் பெங்களூருவில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முலாயம் சிங் யாதவ் என்ற அந்த நபர் பெங்களூருவில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

அவர் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த போது இக்ரா ஜீவானி என்ற பெண்ணுடன் தொடர்பு கொண்டார். அந்த பெண் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவர்கள் காதலித்து, போலி ஆவணங்கள் தயாரித்து, இருவரும் சேர்ந்து வாழ அவளை இந்தியாவுக்கு அழைத்து வர திட்டம் தீட்டினார்கள்.

இதையும் படிங்க..பிரபல யூடியூபர் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த சப்ஸ்க்ரைபர்.. ஹோம் டூரால் வந்த வினை !!

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் பேசிய போது, அந்த நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்தார். ஆன்லைனில் லுடோ விளையாடுவார். கடந்த ஆண்டு அவருக்கு மைனர் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. சமீபத்தில், அவர் தனது பாகிஸ்தானிய காதலியை திருமணம் செய்து கொள்ள பெங்களூரு வருமாறு கூறினார்.

2022 செப்டம்பரில் அவளை நேபாளம் வழியாக இந்தியாவுக்குக் கொண்டு வர அவர்கள் திட்டம் தீட்டினார்கள். இருவரும் பெல்லந்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூலித்தொழிலாளிகள் குடியிருப்பில் வசித்து வந்தனர். பெண் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு (FRRO) அழைத்துச் செல்லப்பட்டதாக டிசிபி எஸ் கிரிஷ் தெரிவித்தார்.

யாதவ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்), 495 (திருமணத்தை மறைத்தல்), 468 (போலி செய்தல்), மற்றும் 471 (போலி ஆவணங்கள்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தம்பதியர் வசித்து வந்த சொத்தின் உரிமையாளரான கோவிந்த ரெட்டி மீதும் வெளிநாட்டினர் சட்டம் பிரிவு 7ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க..Viral: நடுரோட்டில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி.. அதுவும் திருட்டு பைக் வேற! இதெல்லாம் நமக்கு தேவையா கோபி !!

தனது சர்ஜாபூர் சாலை வளாகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சிறுமி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காததால் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அவள் பாகிஸ்தானின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவள் என்பது யாதவுக்கு முதலில் தெரியாது. இருப்பினும், அவருக்குத் தெரிந்தவுடன், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். யாதவ் மற்றும் அந்த மைனர் பெண் நேபாளத்தின் காத்மாண்டுவில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி இந்தியா-நேபாள எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர். பின்னர் தம்பதியினர் ஆதார் அட்டையை போலியாக தயாரித்து, சிறுமியின் பெயரை ரவா யாதவ் என மாற்றிவிட்டனர் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..ஆளுநர் பதவியே வேண்டாம்.. மகாராஷ்டிரா ஆளுநர் அதிரடி ராஜினாமா - யார் இந்த பகத்சிங் கோஷ்யாரி ?

click me!